பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை கடந்தது

Added : நவ 22, 2020
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில், மேலும் 31 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்தது.கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 23,987 பேர். மாவட்டத்தில் கர்ப்பிணி 1, நோய் அறிகுறியுடன் 7, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 23 பேர் என மொத்தம் 31 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது.இதனால் பாதிப்பு எண்ணிக்கை 24,018 ஆக

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், மேலும் 31 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்தது.

கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 23,987 பேர். மாவட்டத்தில் கர்ப்பிணி 1, நோய் அறிகுறியுடன் 7, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 23 பேர் என மொத்தம் 31 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது.இதனால் பாதிப்பு எண்ணிக்கை 24,018 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 43 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 23,611 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 3,94,199 பேருக்கு பரிசோதனை செய்ததில், 24,018 பேருக்கு தொற்று உறுதியானது.

3,69,781 பேருக்கு தொற்று இல்லை. 400 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டி யுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட 104 பேர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 275 ஆக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X