தமிழ்நாடு

கோவை மாநகராட்சி மறுபடியும் 'பர்ஸ்ட்!' மாற்றி மாற்றி அறிவிப்பதால் தலை 'கிறுகிறு'

Updated : நவ 23, 2020 | Added : நவ 22, 2020
Share
Advertisement
கோவை:'ஸ்மார்ட் சிட்டி' திட்ட செயலாக்கத்தில், தமிழக அளவில், கோவை மாநகராட்சி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி மிஷன் அறிக்கையில், 42வது இடம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சிகளின் நிர்வாக ஆணையத்தின் முதலிடம் குறித்த அறிவிப்பு, தலையை சுற்ற வைக்கிறது.மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ரூ.998.49
 கோவை மாநகராட்சி மறுபடியும் 'பர்ஸ்ட்!' மாற்றி மாற்றி அறிவிப்பதால் தலை 'கிறுகிறு'

கோவை:'ஸ்மார்ட் சிட்டி' திட்ட செயலாக்கத்தில், தமிழக அளவில், கோவை மாநகராட்சி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி மிஷன் அறிக்கையில், 42வது இடம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சிகளின் நிர்வாக ஆணையத்தின் முதலிடம் குறித்த அறிவிப்பு, தலையை சுற்ற வைக்கிறது.
மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ரூ.998.49 கோடியில், கோவை மாநகராட்சியில், 45 பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரூ.224.32 கோடியில், 30 பணிகள் முடிந்து விட்டன. ரூ.760.06 கோடியில், 14 பணிகள் செயல்பாட்டில் இருக்கின்றன. ரூ.14.11 கோடியில், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் கட்டுவதற்கான, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.ஸ்மார்ட் சிட்டி கூட்டம்இச்சூழலில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் செயலாக்கம் தொடர்பான ஆய்வு கூட்டம், சென்னையில், நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில், சமீபத்தில் நடந்தது.அதில், கோவை மாநகராட்சியே முதலிடம் வகிப்பதாக அறிவிக்கப்பட்டது. சென்னை - இரண்டாமிடம், மதுரை - மூன்றாமிடம் பெற்றுள்ளன.ஆனால், அகில இந்திய அளவில், மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' மிஷன் வெளியிடும் ஆய்வறிக்கையில், கோவை - 42, சென்னை - 60, மதுரை - 48வது இடத்தில் உள்ளன. மாநில அரசு வழங்கும் தர வரிசை, மத்திய அரசு வழங்கும் தர வரிசை பட்டியல், ஒவ்வொரு முறையும் மாறுபட்டு காணப்படுகிறது.ஏன் இந்த முரண்பாடு?இத்தகைய முரண்பாடு ஏன் ஏற்படுகிறது என, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:திட்ட செயலாக்கத்தில், நிதி பெறுவது தொடர்பாக, 'ஆன்-லைன்' முறையில், ஆவணங்களை பதிவேற்றுவதன் அடிப்படையில், மத்திய அரசு, 'ரேங்க்' வழங்குகிறது.ஏதேனும் ஒரு பணியை முடித்து விட்டோம் என கூறி, அதற்கான ஆவணங்களை பதிவேற்றினால், உடனடியாக, ரேங்க் மாறி விடுகிறது.
தர வரிசை பட்டியல் வெளியிட்ட நாளில், 45வது இடத்தில், கோவை இருந்தது; இன்றைய தினம், 42வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.கோவையில் பெரிய திட்டங்கள்கோவையில் செயல்படுத்துபவை, பெரிய அளவிலான புராஜெக்ட்டுகள். குளங்கள் மேம்பாடு, வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட், 24 மணி நேரம் குடிநீர் திட்டம் போன்றவை பயன்பாட்டுக்கு வர, இன்னும் சில காலம் ஆகும்.இதுதவிர, நடைமுறை சிக்கல்களால், நரசாம்பதி மற்றும் சிங்காநல்லுார் குளங்களில் இன்னும் வேலை துவங்கவில்லை. சர்வதேச ஹாக்கி மைதானம் கட்டும் திட்ட அறிக்கை திரும்பி வந்தது.அத்திட்டத்தை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் செயல்படுத்தலாம் என, ஆலோசிக்கப்பட்டது. அதன் பின், கிடப்பில் கிடக்கிறது. இதுபோன்ற காரணங்களாலும், மத்திய அரசின் தர வரிசை பட்டியலில், பின்தங்குகிறோம்.
சர்ச்சை கூட்டம் நடக்கலைஇதில், இன்னொரு விஷயம் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், எம்.பி., தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்; அதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால், மதிப்பெண் வழங்கப்படுகிறது.கோவையில் தேவையற்ற சர்ச்சை எழ வாய்ப்பு உருவாகும் என்பதால், அத்தகைய கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ரூ.224.32 கோடி 'காலி!'கோவையில், ரூ.224.32 கோடியில், 30 பணிகள் முடிஞ்சாச்சுன்னு, ஸ்டேட் லெவல்ல நடந்த கூட்டத்துல, நம்ம மாநகராட்சி நிர்வாகம் சொல்லியிருக்கு. இந்த ஸ்டேட்மென்ட்டுதான், தலையை சுத்த வைக்குது. 'ஸ்மார்ட் சிட்டி'ங்கற பேருல, சில குளங்கள்ல வேலை நடந்துட்டிருக்கு; எந்த குளத்துலயும் இன்னும் முழுசா வேலை முடியலை; ஜனங்க பயன்பாட்டுக்கும் வரலை. ஆனா, 30 பணிகள் முடிஞ்சாச்சுன்னு சொல்றாங்க. அப்படி என்னென்ன வேலை செஞ்சாங்கன்னு தெரியலை; ஆனா, ரூ.224.32 கோடியை காலி செஞ்சிட்டாங்கன்னு, மட்டும் தெரியுது!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X