கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அதிர வைத்த கொலை வழக்கு: வரும் 30ம் தேதி தீர்ப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
கோவை:கோவையில், பெண் த்ரில் கொலை வழக்கில், இரு தரப்பு இறுதி வாதம் நிறைவடைந்ததை தொடர்ந்து, வரும் 30ல் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.கோவை, சிவானந்தா காலனியை சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி அம்மாசை,45, 2011, டிச.,11ல், வக்கீல் ஈட்டி ராஜவேல் அலுவலகத்தில், கொலை செய்யப்பட்டார்.போலீசார் விசாரிக்கையில், ராஜவேலுவின் மனைவி வக்கீல் மோகனா, வெளிமாநிலங்களில், நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த

கோவை:கோவையில், பெண் த்ரில் கொலை வழக்கில், இரு தரப்பு இறுதி வாதம் நிறைவடைந்ததை தொடர்ந்து, வரும் 30ல் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.கோவை, சிவானந்தா காலனியை சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி அம்மாசை,45, 2011, டிச.,11ல், வக்கீல் ஈட்டி ராஜவேல் அலுவலகத்தில், கொலை செய்யப்பட்டார்.போலீசார் விசாரிக்கையில், ராஜவேலுவின் மனைவி வக்கீல் மோகனா, வெளிமாநிலங்களில், நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்ததும், அவர் மீதான வழக்கை முடிவுக்கு கொண்டு வர, அம்மாசையின் உடலை காண்பித்து, மோகனாவுக்கு இறப்பு சான்றிதழ் பெற திட்டமிட்டதும் தெரியவந்தது.அதற்காக, ராஜவேல்அலுவலகத்துக்கு, குடும்ப வழக்கு தொடர்பாக விவரம் கேட்க வந்த அம்மாசையை கொன்று சடலத்தை எரித்து, இறந்தது மோகனா எனக்கூறிமாநகராட்சியில் சான்றிதழ் பெற்றது தெரிந்தது.வக்கீல் ராஜவேலு,52, மோகனா,47, பொன்ராஜ்,47, பழனிச்சாமி,45, ஆகியோர், 2014ல் கைது செய்யப்பட்டனர். கோவை ஐந்தாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில், கடந்த 9 ஆண்டுகளாக விசாரணை நடந்தது.சாட்சி விசாரணை முடிந்த நிலையில், அரசு மற்றும் எதிர் தரப்பு இறுதி வாதமும் நிறைவடைந்தது. இதையடுத்து, வரும் 30ல் தீர்ப்பு அளிக்கப்படும் என, நீதிபதி முகமது பாரூக் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X