குடிக்க நீரின்றி டி.வி.எஸ்., நகர் மக்கள் அவதி

Added : நவ 22, 2020
Share
Advertisement
பாதியில் நிற்குது சாலைப்பணிமாநகராட்சி, 6வது வார்டுக்கு உட்பட்ட, டி.வி.எஸ்.,நகர், நஞ்சுக்குட்டி லே-அவுட்டில், சாலை புதுப்பிக்க, கடந்த 10 மாதங்களுக்கு முன், பணி துவக்கப்பட்டு, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. அத்துடன், சாலைப்பணி கைவிடப்பட்டுள்ளது. மக்கள் அவதிப்படுகின்றனர்.- வெங்கடேசன், டி.வி.எஸ்.,நகர்.நடந்து செல்லக்கூட வழியில்லைபோத்தனுார், மாரியப்பக்கோனார் வீதியில், சாலை

பாதியில் நிற்குது சாலைப்பணிமாநகராட்சி, 6வது வார்டுக்கு உட்பட்ட, டி.வி.எஸ்.,நகர், நஞ்சுக்குட்டி லே-அவுட்டில், சாலை புதுப்பிக்க, கடந்த 10 மாதங்களுக்கு முன், பணி துவக்கப்பட்டு, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. அத்துடன், சாலைப்பணி கைவிடப்பட்டுள்ளது. மக்கள் அவதிப்படுகின்றனர்.- வெங்கடேசன், டி.வி.எஸ்.,நகர்.

நடந்து செல்லக்கூட வழியில்லைபோத்தனுார், மாரியப்பக்கோனார் வீதியில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையை செப்பனிட வேண்டும்.- விஜயலட்சுமி, போத்தனுார்.

சாலையை செப்பனிடணும்மாநகராட்சி, 94வது வார்டுக்கு உட்பட்ட, மாச்சம்பாளையம் ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையை செப்பனிட வேண்டும். சாலையை ஆக்கிரமித்துள்ள கட்டடங்களையும் அகற்ற வேண்டும்.- மாணிக்கராஜ், மாச்சம்பாளையம்.

சாக்கடை கால்வாயை துார்வாரணும்நஞ்சேகவுண்டன்புதுார், விவேகானந்தர் ரோட்டில் சாக்கடை கால்வாய் முழுவதும் குப்பை, கற்களால் அடைப்பட்டு, கழிவுநீர் செல்ல வழியின்றி உள்ளது.- மோகன்குமார், நஞ்சேகவுண்டன்புதுார்.

நேரு வீதியில் சாலை மோசம்சுந்தராபுரம், சாரதாமில் ரோடு, நேரு வீதியில் பாதாள சாக்கடை கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட ரோடு, பணி முடிந்ததும் மேலோட்டமாக மூடப்பட்டு, குண்டும் குழியுமாக உள்ளது.- குமாரசாமி, நேரு வீதி.

பட்டுபோன மரக்கிளையால் அச்சம்மாச்சம்பாளையம், விநாயகர் கோவில் வீதி - ரவுண்டு ரோடு சந்திப்பில் உள்ள மரத்தின் கிளை, பட்டுப்போய் விழும் நிலையில் உள்ளது. குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உள்ளனர். இக்கிளையை அகற்ற வேண்டும்.- கண்ணன், ரவுண்டு ரோடு.

ஆபத்தான மின் கம்பத்தை மாற்றணும்பேரூர் செட்டிபாளையம், ஆறுமுகக் கவுண்டனுார், பழனிசாமி நகரில் உள்ள, தண்ணீர் தொட்டி அருகில், மின்கம்பம் சிதிலமடைந்துள்ளது. புது கம்பம் அமைக்க வேண்டும்.- பாண்டியன், பழனிசாமி நகர்.

சாலை முழுவதும் குப்பை குவியல்மாநகராட்சி, 57வது வார்டுக்கு உட்பட்ட, மணி மகால் ரோடு, ராஜலட்சுமி நகரில், குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. இதன் அருகிலேயே குப்பை சாலை முழுவதும் சிதறி கிடக்கிறது.- வசந்தா, ராஜலட்சுமி நகர்.

துாய்மை பணியாளர்கள் வருவதில்லைமாநகராட்சி, 29வது வார்டுக்கு உட்பட்ட, கணபதிபுதுார், ஐந்தாவது வீதிக்கு, துாய்மை பணியாளர்கள் வருவதில்லை. ஆங்காங்கே, குப்பை குவிந்துள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ராஜன், கணபதிபுதுார்.

மீனாட்சி நகரில் விளக்கு எரிவதில்லைகணபதி, மீனாட்சி நகர் இரண்டாவது வீதியில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 492) கடந்த 7 மாதங்களாக விளக்கு எரிவதில்லை. பலமுறை மின் வாரியத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.- தாஸ், மீனாட்சி நகர்.

சாலையில் குழி; வாகன ஓட்டிகள் கிலிஆவாரம்பாளையம், ேஷாபா நகர் -2 மற்றும் இளங்கோ நகரில் இருந்து, பீளமேடு கோபால் நாயுடு பள்ளி செல்லும் பிரதான சாலையின் திருப்பத்தில் உள்ள, பெரிய குழியில் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.- நித்யகுமார், ேஷாபா நகர்.

சரோஜினி வீதியில் சுகாதார சீர்கேடுசெல்வபுரம், தில்லை நகர், சரோஜினி வீதி -3ல், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- சீனிவாசன், சரோஜினி வீதி.

குடிநீர் தட்டுப்பாடுமாநகராட்சி, ஆறாவது வார்டுக்கு உட்பட்ட, தடாகம் ரோடு, டி.வி.எஸ்.,நகர், லட்சுமிபுரம் இரண்டாவது கிராஸில், குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகிக்கப்படுவதால், தட்டுப்பாடு நிலவுகிறது; மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.- தங்கராஜா, லட்சுமிபுரம்.

விளக்கு எரிவதில்லைசொக்கம்புதுார், அய்யாவுபண்ணாடி வீதியில், கடந்த இரண்டு மாதங்களாக, தெருவிளக்கு எரிவதில்லை.- விஸ்வநாதன், சொக்கம்புதுார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X