சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணறுகளில் விழுந்த கன்று குட்டிகள் மீட்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனம் அருகே இருவேறு கிணறுகளில் தவறி விழுந்த கன்று குட்டிகளை தீயைணப்பு வீரர்கள் மீட்டனர்.திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மாடுகள் அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் நேற்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, பச்சையம்மாள் என்பவரின் 60 அடி ஆழமுள்ள கிணற்றில், வேலுவின் கன்றுக்குட்டி தவறி விழுந்தது. இது குறித்து தகவலறிந்த

திண்டிவனம் : திண்டிவனம் அருகே இருவேறு கிணறுகளில் தவறி விழுந்த கன்று குட்டிகளை தீயைணப்பு வீரர்கள் மீட்டனர்.

திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மாடுகள் அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் நேற்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, பச்சையம்மாள் என்பவரின் 60 அடி ஆழமுள்ள கிணற்றில், வேலுவின் கன்றுக்குட்டி தவறி விழுந்தது. இது குறித்து தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள், விரைந்து சென்று, போராடி கயிறு கட்டி,கன்றுக்குட்டியை மீட்டனர்.

மற்றொரு சம்பவம்: திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கம் கிராமத்தில், மாயக்கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கன்று குட்டி, நேற்று முன்தினம் ஏழுமலை என்பவரின் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்பு வரர்கள் விரைந்து சென்று கன்று குட்டியை மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X