பொது செய்தி

தமிழ்நாடு

6 அடி மட்டுமே நிரம்பிய ஏரி

Added : நவ 22, 2020
Share
Advertisement
உத்திரமேரூர் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், இதுவரை பெய்துள்ள பருவ மழைக்கு, உத்திரமேரூர் ஏரி, 6 அடி மட்டுமே நிரம்பியுள்ளதால், முழு கொள்ளளவையும் எட்டுமா என, விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டாவது மிகப்பெரிய ஏரியான உத்திரமேரூர் ஏரி, 5,636 ஏக்கர் பாசன பரப்பும், 958.81 மில்லியன் கன அடி கொள்ளளவும், 20 அடி உயரமும் உடையது.வைரமேக தடாகம் என,

உத்திரமேரூர் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், இதுவரை பெய்துள்ள பருவ மழைக்கு, உத்திரமேரூர் ஏரி, 6 அடி மட்டுமே நிரம்பியுள்ளதால், முழு கொள்ளளவையும் எட்டுமா என, விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டாவது மிகப்பெரிய ஏரியான உத்திரமேரூர் ஏரி, 5,636 ஏக்கர் பாசன பரப்பும், 958.81 மில்லியன் கன அடி கொள்ளளவும், 20 அடி உயரமும் உடையது.வைரமேக தடாகம் என, அழைக்கப்படும் இந்த ஏரிநீரை பயன்படுத்தி, வேடபாளையம், நீரடி, குப்பைய நல்லுார் உள்ளிட்ட, 18 கிராமங்களைச் சேர்ந்த, 5,462 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.கடந்த, 2015ல் பெய்த கன மழையில் முழுதும் நிரம்பிய ஏரி, அதன்பின், நான்கு ஆண்டுகளாக முழுமையாக நிரம்பவில்லை.

கடந்த ஆண்டு பருவமழைக்கு, 8 அடி மட்டுமே தண்ணீர் நிரம்பியது. இதனால், ஏரி நீரை பயன்படுத்தி, ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்தனர். இந்நிலையில், நடப்பாண்டு பருவ மழைக்கு ஏரி நிரம்பினால், மூன்று போகம் சாகுபடி செய்யலாம் என, விவசாயிகள் எதிர்பார்த்து வந்தனர்.ஆனால், பருவ மழை துவங்கி ஒரு மாதம் நிறைவு பெற்றும், இதுவரை, 6 அடி மட்டுமே நீர் சேகரமாகியுள்ளது.இனிவரும் நாட்களில், பருவ மழை தீவிரமடைந்து, ஏரி நிரம்பும் அளவிற்கு மழை பெய்யுமா என, உத்திரமேரூர் வட்டார விவசாயிகள், ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X