சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாயமான சிறுவர்கள் பத்திரமாக மீட்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
பேரூர்:பேரூர் அருகே காணாமல் போன, 13 வயது சிறுமி மற்றும் 14 வயது சிறுவனை, போலீசார் பத்திரமாக மீட்டனர்.கோவைப்புதுாரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின், 13 வயது மகள் மற்றும் கூலித்தொழிலாளியின், 14 வயது மகன் கடந்த, 18ம் தேதி மாயமாகினர். இது குறித்து, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், பேரூர் போலீசார் விசாரித்தனர்.முதற்கட்ட விசாரணையில்,அதே பகுதியை சேர்ந்த பவித்ரா, 20, என்ற பெண்ணுடன்

பேரூர்:பேரூர் அருகே காணாமல் போன, 13 வயது சிறுமி மற்றும் 14 வயது சிறுவனை, போலீசார் பத்திரமாக மீட்டனர்.கோவைப்புதுாரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின், 13 வயது மகள் மற்றும் கூலித்தொழிலாளியின், 14 வயது மகன் கடந்த, 18ம் தேதி மாயமாகினர். இது குறித்து, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், பேரூர் போலீசார் விசாரித்தனர்.முதற்கட்ட விசாரணையில்,அதே பகுதியை சேர்ந்த பவித்ரா, 20, என்ற பெண்ணுடன் பஸ்சில் சென்றது தெரியவந்தது. வழக்கு பதிந்த போலீசார், மேட்டுப்பாளையம், ஊட்டி, கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், மூவரும் பஸ்சில் கவுண்டம்பாளையம் வந்துள்ளனர். அவர்களை மீட்ட போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X