பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கூட்டுறவு வங்கி கடன் வழங்கல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியம் முண்டியம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தமிழக அரசு, கொரோனா நோய் தொற்று பாதிப்பால் இழந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கி வருகிறது. முண்டியம்பாக்கம் பகுதியிலுள்ள மகளிர் சுய

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியம் முண்டியம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தமிழக அரசு, கொரோனா நோய் தொற்று பாதிப்பால் இழந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கி வருகிறது. முண்டியம்பாக்கம் பகுதியிலுள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்களுக்கு கடனுதவி வழங்க கோரி அமைச்சர் சண்முகத்திடம் மனு கொடுத்தனர்.

அமைச்சரின் பரிந்துரையின் பேரில் முண்டியம் பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வடகுச்சிபாளையம், ஒரத்துார் ஊராட்சிகளை சேர்ந்த உழவர் உலகம், நெற்களஞ்சியம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி தலைவர் லட்சுமி நாராயணன், ரூ 6லட்சம் கடனுதவியை வழங்கினார்.வங்கி செயலாளர் சுந்தர மூர்த்தி,இயக்குனர்கள் ராஜவேல், ராஜேந்திரன், ராதாபுரம் வங்கி தலைவர் நரசிம்மன், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X