பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்; விக்கிரவாண்டியில் ஆர்.டி.ஓ., ஆய்வு

Added : நவ 22, 2020
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்தல் முகாமினை ஆர்.டி.ஓ., ஆய்வு செய்தார்.விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்தல் முகாம் கடந்த 21ம் தேதி துவங்கியது. இரண்டாவது நாளான நேற்று காலை ஆர்.டி.ஓ., ராஜேந்திரன் பனையபுரம், தொரவி நடுநிலைப்பள்ளிகளில் நடைபெறும் முகாம்களில் திடீர் ஆய்வு செய்தார். இது வரை பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்தல் முகாமினை ஆர்.டி.ஓ., ஆய்வு செய்தார்.

விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்தல் முகாம் கடந்த 21ம் தேதி துவங்கியது. இரண்டாவது நாளான நேற்று காலை ஆர்.டி.ஓ., ராஜேந்திரன் பனையபுரம், தொரவி நடுநிலைப்பள்ளிகளில் நடைபெறும் முகாம்களில் திடீர் ஆய்வு செய்தார். இது வரை பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை என்ற விபரங்களை கேட்டறிந்து.

பொதுமக்கள் முகாம்களில் பங்கேற்க வரும் போது முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடிக்க வலியுறுத்தினார். வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் போன்ற பணிகளை ஆன்லைனில் https://www.nvsp.in என்ற இணையதள முகவரியில் படிவம் எண்கள் 6,7,8,8A குறித்து மனு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தினார்.

ஒவ்வொரு பூத்களிலும் கட்சி முகவர்கள் பங்கேற்கவேண்டும் என ஆலோசனை வழங்கினார். தாசில்தார் தமிழ்செல்வி, தேர்தல் தனி தாசில்தார் வேலு,வருவாய் ஆய்வாளர் குமரன், வி.ஏ.ஓ., ஸ்ரீதர்,கிராம உதவியாளர் அனிதா மற்றும் பூத் கமிட்டி முகவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X