குப்பைத்தொட்டியால் ஆக்கிரமிப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
கோவை:கோவை ராம்நகர் பகுதியில் கார் மற்றும் டூவீலர்களை மறு விற்பனை செய்பவர்கள் உள்ளிட்ட சில பிசினஸ் நிறுவனத்தினர், பழைய குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்தி நடைபாதை, ரோடு ஆகியவற்றை நுாதன முறையில் ஆக்கிரமித்து வருகின்றனர்.கோவையின் மிகப்பழமையான குடியிருப்புப் பகுதியாக இருந்த ராம்நகர், சமீபத்திய ஆண்டுகளில் முழுக்க முழுக்க வணிகப் பகுதியாக மாறிக் கொண்டிருக்கிறது.

கோவை:கோவை ராம்நகர் பகுதியில் கார் மற்றும் டூவீலர்களை மறு விற்பனை செய்பவர்கள் உள்ளிட்ட சில பிசினஸ் நிறுவனத்தினர், பழைய குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்தி நடைபாதை, ரோடு ஆகியவற்றை நுாதன முறையில் ஆக்கிரமித்து வருகின்றனர்.கோவையின் மிகப்பழமையான குடியிருப்புப் பகுதியாக இருந்த ராம்நகர், சமீபத்திய ஆண்டுகளில் முழுக்க முழுக்க வணிகப் பகுதியாக மாறிக் கொண்டிருக்கிறது.
மாநகராட்சி, மாநகர காவல்துறை அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் லஞ்சப்போக்கு காரணமாக, பழைய வீடுகள் அனைத்தும் வணிகக் கட்டடங்களாக மாற்றப்பட்டு, வணிகச் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.ஓட்டல், பேக்கரி, ஒர்க் ஷாப், குடோன் என இங்கில்லாத வணிகக் கட்டடங்களே இல்லை என்கிற அளவுக்கு, வணிகச் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால், குடியிருப்புவாசிகள் பலவிதங்களிலும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். இதில் குப்பைத் தொட்டிகளை வைத்து மிகவும் நுாதனமான முறையில், நடைபாதைகள் மற்றும் ரோடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.கோவை நகரில் பெரும்பாலான குடியிருப்புகளில், தள்ளுவண்டிகளைக் கொண்டு வந்து, மட்கும் குப்பை, மட்காத குப்பைகளை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சேகரித்துப் பிரித்துக் கொடுக்கின்றனர்.ஆனால் நகரின் பழமையான இந்தக் குடியிருப்பு பகுதியில், குப்பை சேகரிப்புப் பணி முழுமையாக நடப்பதில்லை. மாறாக, ஆங்காங்கே ரோட்டை அடைத்து குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு வைக்கப்பட்ட குப்பைத்தொட்டிகள் அனைத்தும் ஓட்டை உடைசலாகி, வளைந்து நெளிந்து குப்பை போலவே காட்சியளிக்கின்றன.அவற்றில்தான் வேறு வழியின்றி மக்கள், குப்பை கொட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதனால் திடக்கழிவு மேலாண்மை என்பது, இங்கே பெயரளவில் கூட கடைபிடிக்கப்படுவதில்லை.கடைகள், வணிக நிறுவனங்கள் நடத்துவோர், குப்பையை இவற்றில் மொத்தமாகக் கொட்டி விட்டுச் செல்கின்றனர். இந்த குப்பைத்தொட்டிகள், குடியிருப்பின் சுகாதாரக்கேட்டுக்கு வழிகோலுவதோடு, ஆக்கிரமிப்புக்கும் உதவுகின்றன. இந்த குப்பைத்தொட்டிகளை நடைபாதையிலும், ரோட்டிலும் வைத்து விட்டு, அதையொட்டி வாகனங்களை நிரந்தரமாக நிறுத்திக் கொள்கின்றனர்.குறிப்பாக, டூவீலர்களை மறு விற்பனை செய்யும் நிறுவனத்தினர், நடைபாதை முழுவதையும் ஆக்கிரமித்து வண்டிகளை நிறுத்தி வைப்பதோடு, ரோட்டில் இரண்டு அல்லது மூன்று குப்பைத் தொட்டிகளை வைத்து, அவற்றுக்கு இடையில் இந்த வண்டிகளை நிறுத்தி விடுகின்றனர்.இதே பகுதியில் கார்களை, மறு விற்பனை செய்யும் சில நிறுவனங்களும், ரோட்டை அடைத்து கார்களை நிறுத்தி விடுவதால், ஏற்கனவே குறுகலாகவுள்ள ரோட்டில், வாகனங்கள் செல்வது தடைபட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் அந்தப் பகுதியில் குடியிருப்போர், பெரும் மன உளைச்சலுக்கும், அவதிக்கும் உள்ளாகின்றனர்.
அவசரத்துக்கு எங்குமே போக முடியாத நிலை உள்ளது.மாநகராட்சி நிர்வாகம் இங்குள்ள குப்பைத் தொட்டிகளை நிரந்தரமாக அகற்றி, குப்பை சேகரிப்புக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.நடைபாதையையும், ரோட்டையும் ஆக்கிரமித்து வண்டிகளை நிறுத்துவோர் மீது, மாநகர போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்கள் மீது இந்த ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருந்தால் செய்வார்கள். பார்ப்போம் செய்கிறார்களா என்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X