சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் கவிழ்ந்து விபத்து 10க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
ஆவடி : ஆவடி அருகே, துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது, மினி சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். மதுபோதையில், விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரை, போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி அருகே, வெள்ளானுாரில் இருந்து மிட்னமல்லி பகுதிக்கு, மினி சரக்கு வாகனத்தில், உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு, பெண்கள் பலர் சென்றனர்.வாகனத்தை,

ஆவடி : ஆவடி அருகே, துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது, மினி சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர்.

மதுபோதையில், விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரை, போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி அருகே, வெள்ளானுாரில் இருந்து மிட்னமல்லி பகுதிக்கு, மினி சரக்கு வாகனத்தில், உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு, பெண்கள் பலர் சென்றனர்.வாகனத்தை, வெள்ளானுாரைச் சேர்ந்த, சிவா என்பவர் ஓட்டிச்சென்றார். நேற்று மதியம், வெள்ளானுார் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி சந்திப்பு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்தது.இதில், 10க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டுனர் சிவா அங்கிருந்து தப்பினார்.

விபத்தில், வெள்ளானுாரைச் சேர்ந்த நந்தினி, 45, செல்வி, 50, பச்சையம்மாள், 38, உள்ளிட்டோர் பலத்த காயமடைந்தனர்.விபத்தில் சிக்கியவர்களுக்கு, ஆவடியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், அவர்கள், அம்பத்துார் தனியார் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு, மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த விபத்து குறித்து, ஆவடி போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'ஓட்டுனர் சிவா, மது போதையில் வாகனம் ஓட்டியதே, விபத்துக்கு காரணம்' என்றனர்.மேலும், தப்பியோடிய சிவாவை, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X