அரசியல் செய்தி

தமிழ்நாடு

'30 தொகுதிகளில் வெற்றி கொடுங்கள்!' பா.ஜ.,வினருக்கு அமித் ஷா கட்டளை

Updated : நவ 24, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (59)
Share
Advertisement
வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் குறைந்தபட்சம், 30 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்; 2026ல் தாமரை ஆட்சி மலரும்' என, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., மூத்த நிர்வாகிகளிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்திற்கு, இரண்டு நாள் பயணமாக அமித் ஷா, நேற்று முன்தினம் சென்னை வந்தார். பட்டினப்பாக்கத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நேற்று முன்தினம்
Amit Shah, BJP, TN visit, அமித் ஷா, பாஜ

வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் குறைந்தபட்சம், 30 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்; 2026ல் தாமரை ஆட்சி மலரும்' என, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., மூத்த நிர்வாகிகளிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்திற்கு, இரண்டு நாள் பயணமாக அமித் ஷா, நேற்று முன்தினம் சென்னை வந்தார். பட்டினப்பாக்கத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு, பா.ஜ., மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இரவு, 9:30 மணி வரை இந்த ஆலோசனை நீடித்தது. பின், தமிழக பா.ஜ., மையக்குழு கூட்டம், இரவு, 10:30 மணிக்கு துவங்கி, 11:30 மணி வரை நடந்தது. அதில், கூட்டணி குறித்தும், வெற்றி வாய்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நேற்று காலை, 9:00 மணிக்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், தமிழக அமைப்பாளர் செந்தில், செயலர் ராஜேந்திரன், தென் தமிழக அமைப்பாளர் ஆறுமுகம், செயலர் ஆடலரசன், வட தமிழக அமைப்பாளர் பி.எம்.ரவிகுமார், செயலர் ஜெகதீஷ் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன், அமித் ஷா ஆலோசித்தார்.

பா.ஜ., மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம், அமித் ஷா ஆலோசித்தது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தென் மாநிலங்களில், கர்நாடகத்தில் ஆட்சி அமைத்து விட்டோம். ஆனால், தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி மலரவில்லை என்ற ஆதங்கம் உள்ளது. தமிழகமும், தமிழக மக்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். என் கவனம் முழுதும், இனி தமிழகத்தில், பா.ஜ., ஆட்சியை அமைப்பது குறித்து தான் இருக்கும்.

பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை, தமிழகம் வருவேன். வரும் சட்டசபை தேர்தலில், உங்கள் ஆலோசனைகளுக்கும், தொண்டர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, தேர்தல் சூழ்நிலையை கருத்தில் வைத்து முடிவு எடுக்கப்படும். கூட்டணி முடிவை, மேலிடம் இறுதி செய்யும். தமிழகத்தில், பா.ஜ., குறைந்தபட்சம், 30 தொகுதிகளில் வெற்றி வாகை சூடி, ஆட்சியில் பங்கெடுக்க வேண்டும்.

வரும், 2026ல் தனி கட்சியாக போட்டியிட்டு, பா.ஜ., ஆட்சி மலர்வதற்கு அனைவரும் பணியாற்ற வேண்டும்.நிர்வாகிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில் கவனம் செலுத்தி,'பூத்' அளவில் கட்சியை பலப்படுத்தவும், தேர்தலில் வெற்றி பெறவும், கடுமையாக உழைக்க வேண்டும், இவ்வாறு, அமித்ஷா பேசியுள்ளார்.

மோடி - அமித் ஷா திடீர் சந்திப்பு-

தமிழகத்தில் இருந்து நேற்று மதியம் டில்லி திரும்பிய, பா.ஜ., மூத்த தலைவர் அமித் ஷா, நேற்று இரவு, பிரதமர் மோடியை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தார். மோடி சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி, அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொள்ள இருக்கிறார்.தமிழகத்தில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று முன்தினம் சென்னை சென்றார்.

அங்கு, திட்டங்களை துவக்கி வைத்த பின், தான் தங்கி இருந்த லீலா பேலஸ் ஓட்டலில், அ.தி.மு.க., தலைமை பொறுப்பிலிருக்கும் முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோரை சந்தித்து, சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்துப் பேசினார்.கூடவே, அ.தி.மு.க.,வில் மூவருக்கு, மத்திய அமைச்சர் பதவி கொடுக்கவும், முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒருவருக்கு கேபினட் பதவியும், மற்ற இருவருக்கு இணை அமைச்சர் பதவியும் கொடுக்கப் படலாம்.அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,வுக்கு கிடைக்கக் கூடிய, 'சீட்'கள் எத்தனை, எந்தெந்த எம்.பி.,க்களுக்கு பதவி கொடுப்பது, சென்னை, 'விசிட்'டின் போது சந்தித்த பா.ஜ., உறுப்பினர்கள், ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்பு, மேடையில் அனைவரும் பேசிய விவரங்கள், உறுப்பினர்களுக்கு தான் உத்தரவிட்ட விவரங்கள் என அனைத்தையும், மோடியிடம் அமித் ஷா விளக்கியுள்ளார்.

தமிழக மேலிட பார்வையாளராக யாரை நியமிக்கலாம் என, விவாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பியுஷ் கோயலே நியமிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில், 'தமிழகத்திற்கு அடிக்கடி வருவேன்' என, அமித் ஷா கூறி இருப்பதால், சென்னை தவிர, வேறு எங்கெல்லாம் கூட்டங்கள் நடத்துவது என்பது குறித்த வரைவறிக்கையையும், மோடியிடம், அமித் ஷா காண்பித்திருக்கிறார்.இருவரின், 'மெகா பிளான்'படி, இன்று முதல் பா.ஜ.,வின் அதிரடி வேகமெடுக்கும்.


ரஜினி முடிவு என்ன?சென்னையில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, அமித் ஷாவை ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்தார். அதிகாலை, 2:30 மணி வரை, இருவரும் பேசினர். ரஜினியின் அரசியல் பிரவேசம், அவரது கட்சி பணிகள் குறித்த முக்கிய தகவல்களை, அமித் ஷாவிடம் குருமூர்த்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், பா.ஜ., மற்றும் திராவிட கட்சிகள் அல்லாத கூட்டணியை அமைக்க, ரஜினி விரும்புவதாக, அமித்ஷாவிடம் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரஜினியுடன் அமித் ஷாவும் குருமூர்த்தியின் மொபைல் போன் வாயிலாக பேசியுள்ளார்.
-புதுடில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aashik - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
30-நவ-202017:35:50 IST Report Abuse
aashik பிஜேபி = 0000000000 in Tamil Nadu...
Rate this:
Cancel
vinu - frankfurt,ஜெர்மனி
25-நவ-202011:09:33 IST Report Abuse
vinu தமிழக மக்கள் பிஜேபிக்கு பூஜ்யம் பரிசாக கொடுப்போம்.
Rate this:
Cancel
SARAVANAN G - TRICHY,இந்தியா
24-நவ-202006:20:28 IST Report Abuse
SARAVANAN G இந்திய அரசியல் வானில் அன்றும், இன்றும், என்றும் ஒரே சாணக்கியன் தகத்தகாய கதிரவன் கலைஞர் மட்டுமே.
Rate this:
skandh - Chennai,இந்தியா
24-நவ-202020:53:20 IST Report Abuse
skandhகருணாநிதி அப்படி என்ன செய்தார் சாணக்கியன் என்று சொல்வதற்கு?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X