சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மினி பஸ்' சேவை மீண்டும் துவங்குமா?

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை : கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட 'மினி பஸ்'சை மீண்டும் இயக்க வேண்டும் என, திருமலை நகர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, குரோம்பேட்டை துவங்கி அஸ்தினாபுரம், திருமலை நகர், ஜெய் நகர், கவுரிவாக்கம், சந்தோஷபுரம் வழியாக, மேடவாக்கம் வரை, தடம் எண்: எஸ்2 என்ற, மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது.இந்த பஸ் இயக்கப்பட்டு வந்ததால், புறநகர் பகுதிகளில் இருந்து,

சென்னை : கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட 'மினி பஸ்'சை மீண்டும் இயக்க வேண்டும் என, திருமலை நகர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, குரோம்பேட்டை துவங்கி அஸ்தினாபுரம், திருமலை நகர், ஜெய் நகர், கவுரிவாக்கம், சந்தோஷபுரம் வழியாக, மேடவாக்கம் வரை, தடம் எண்: எஸ்2 என்ற, மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது.இந்த பஸ் இயக்கப்பட்டு வந்ததால், புறநகர் பகுதிகளில் இருந்து, சென்னையின் நகர் பகுதிகளுக்கு செல்லும், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, மார்ச் முதல், பஸ் சேவை நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், செப்டம்பர் முதல், மாநகர பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

இந்நிலையில், திருமலை நகர் வழித்தடத்தில், மினி பஸ் இயக்கப்படவில்லை.கடந்த, 2012 முதல், ஒன்பது ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த மினி பஸ், தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பயணியர், அவதியடைந்து வருகின்றனர்.போக்குவரத்து துறை அதிகாரிகள், மீண்டும் மினி பஸ்சை இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.l பல்லாவரம் ரயில் நிலையம், முதல் திரிசூலம் சக்தி வரை, எஸ் 1, எஸ் 2 என்ற, இரண்டு மினி பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், மளகானந்த புரம், சித்ரா ஜெயின் அப்பார்ட்மென்ட், தர்கா காலனி, திருவள்ளுவர், பாரதி, சாஸ்தா, சுபம், ராஜிவ்காந்தி.மேலும், சிவசக்தி, சத்யா, அம்மன், ராணி அண்ணா, ஜே.ஜே., உழைப்பாளி, ஜெயலட்சுமி, சாரதா நகர்கள், கச்சேரி மலை, ஏ.சி.காலனி, முருகேசபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர், பயனடைந்து வந்தனர்.

இந்நிலையில், அந்த பஸ்களை நிறுத்திவிட்டனர். இது குறித்து கேட்டால், எதிர்பார்த்த கலெக் ஷன் வரவில்லை என, போக்குவரத்து கழக அதிகாரிகள், அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.இதனால், இப்பகுதிகளை சேர்ந்தோர், அதிக கட்டணம் கொடுத்து, பிற வாகனங்களில் செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலர், நடந்தே பல்லாவரத்திற்கு வருகின்றனர்.எனவே, பொதுமக்கள் நலன் கருதி, மினி பஸ்களை மீண்டும் இயக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X