தமிழ்நாடு

வீடூர் அணை நிரம்பாததால் நீர்மட்டம் மிகவும்... குறைவு! சம்பா சாகுபடி குறித்து விவசாயிகள் கவலை

Added : நவ 22, 2020
Share
Advertisement
விக்கிரவாண்டி : பருவ மழை ஏமாற்றியதால் வீடூர் அணையில் நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளது. இதனால் சம்பா பருவ நெல் சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகாவில் அமைந்துள்ள வீடூர் அணை சங்கராபரணி, தொண்டி ஆறு ஒன்று கூடும் இடத்தில் 1959 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, 1960 ல் முன்னாள் முதல்வர் காமராஜரால்
வீடூர் அணை நிரம்பாததால் நீர்மட்டம் மிகவும்... குறைவு! சம்பா சாகுபடி குறித்து விவசாயிகள் கவலை

விக்கிரவாண்டி : பருவ மழை ஏமாற்றியதால் வீடூர் அணையில் நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளது. இதனால் சம்பா பருவ நெல் சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகாவில் அமைந்துள்ள வீடூர் அணை சங்கராபரணி, தொண்டி ஆறு ஒன்று கூடும் இடத்தில் 1959 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, 1960 ல் முன்னாள் முதல்வர் காமராஜரால் நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது.இந்த அணையின் மூலம் 2,200 ஏக்கரும், புதுச்சேரி மாநிலத்தில் 1,000 ஏக்கர் என மொத்தம் 3200 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையின் மொத்த கொள்ளளவான 32 அடி அதாவது 605 மில்லியன் கன அடியாகும்.

ஆண்டு தோறும் பருவ மழை சரியான நேரத்தில் பெய்தால் அணைக்கு செஞ்சி, மேல்மலையனுார் பகுதியிலிருந்து தண்ணீர் வந்து அணை நிரம்பி ஒரு போக பாசனத்திற்கு போதிய அளவு தண்ணீர் இருந்தால் அக்டோபர் 1ம் தேதி முதல் பிப்ரவரி 12 ம்தேதி என 135 நாட்கள் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.இந்தாண்டு பருவ மழையை எதிர்பார்த்து கடந்த செப்டம்பர் மாதத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவகர் தலைமையில் அணை மதகு, பிரதான கால்வாய்கள், கிளை வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டது.

ஆண்டுதோறும் பருவ மழை பெய்யும் போது சராசரியாக 950 மிமீட்டர் பெய்தால் அணை பாசனத்திற்கு திறக்க முடியும்.இந்தாண்டு பருவமழைபொய்த்து இது வரை 300 மிமீட்டர் மழை பெய்துள்ளதால் அணையில் தற்பொழுது 13.5 அடி தான் நீர்மட்டம் உள்ளது. இது அணை கொள்ளளவான 605 மில்லியன் கன அடியில் 5 சதவிகிதம் தான் தண்ணீர் இருப்பு உள்ளது. இது பாசனத்திற்கு திறந்து விட போதுமான அளவிற்கு இல்லை. அணை கட்டியதிலிருந்து இது வரை 29 முறை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மழை பொய்த்து போனதால் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டு 1300 ஏக்கர் பாசன வசதி பெற்றது.சம்பா பருவ நெல் சாகுபடி தொடங்கி 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சில இடங்களில் கிணற்று தண்ணீரை கொண்டு நெல் நடவு பணி நடந்துள்ளது. அணை பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் நெல் நடவு செய்ய முடியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் அதாவது கார்த்திகை மாதத்திற்குள் மழை பெய்து அணை நிரம்பினால் நெல் சாகுபடி செய்ய முடியும். மழை பொய்த்து போனால் உளுந்து, பச்சைபயிறு போன்ற சாகுபடிக்கு மாற விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் சம்பா பருவ நெல் சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. தை மாதத்தில் நெல் அறுவடைசெய்து நல்ல மகசூலை கண்டு மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் இந்த ஆண்டு நெல் மகசூல் கனவாகி விடுமோ என்ற கவலையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X