பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 'மிஸ்சிங்' நபர்கள்; எஸ்.பி., ஆபீசில் கண்டறியும் நிகழ்ச்சி

Added : நவ 22, 2020
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல் போன நபர்கள், அவர்களின் உறவினர்கள் மூலம் கண்டறியும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். டி.ஐ.ஜி., எழிலரசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டு முதல் இதுவரை 180 பேர் மாயமாகியுள்ளனர். இதில்,

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல் போன நபர்கள், அவர்களின் உறவினர்கள் மூலம் கண்டறியும் நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். டி.ஐ.ஜி., எழிலரசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டு முதல் இதுவரை 180 பேர் மாயமாகியுள்ளனர். இதில், மாயமான நபர்கள் கண்டறியப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மீதமுள்ள 54 ஆண்கள், 26 பெண்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை என 82 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து, நேற்று 78 பேரின் குடும்பத்தினரை அழைத்து, தமிழகத்தின் 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அடையாளம் தெரியாத பிணங்களின் போட்டோக்களை காட்டி கண்டறியும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார், காணாமல் போனவர்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X