சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் மாணவி இறப்பு ரூ.16.32 லட்சம் இழப்பீடு

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை : விபத்தில் உயிரிழந்த பிளஸ் 2 மாணவியின் பெற்றோருக்கு, 16.32 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, கொளத்துாரைச் சேர்ந்தவர் ஜானவி, 17; பிளஸ் 2 மாணவி. இவர், 2018 மார்ச்சில், பெரம்பூர் ஸ்டீபன்சன் சாலையில், ஸ்கூட்டரில் பின்புறம் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக பின்புறம் வந்த லாரி, ஜானவி

சென்னை : விபத்தில் உயிரிழந்த பிளஸ் 2 மாணவியின் பெற்றோருக்கு, 16.32 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கொளத்துாரைச் சேர்ந்தவர் ஜானவி, 17; பிளஸ் 2 மாணவி. இவர், 2018 மார்ச்சில், பெரம்பூர் ஸ்டீபன்சன் சாலையில், ஸ்கூட்டரில் பின்புறம் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக பின்புறம் வந்த லாரி, ஜானவி சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், உயிரிழந்தார்.இந்த நிலையில், தன் மகளின் இறப்பிற்கு இழப்பீடு வழங்கக் கோரி, ஜானவியின் பெற்றோர், பிரமிளா மற்றும் ஷியாம்குமார், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு, நீதிபதி வி.சுதா முன் நடந்தது.

விசாரணையில், மனுதாரர்களின் மகள் இறப்பிற்கு, லாரியை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது.எனவே, மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 16.32 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன், தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X