அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அமித் ஷா குற்றச்சாட்டு கரடி பொம்மை நகைச்சுவை': ஸ்டாலின்

Updated : நவ 24, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (73)
Share
Advertisement
சென்னை:'டில்லி சாணக்கியர்கள், மேடையில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும்-, வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று, கரடி பொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். விமர்சனம்கட்சியினருக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:தயாநிதி, கம்பம் செல்வேந்திரன், மஸ்தான், கரூர் சின்னசாமி, பவானி
DMK, MK Stalin, AmitShah, Stalin, BJP, ஸ்டாலின், அமித் ஷா, பாஜ, திமுக

சென்னை:'டில்லி சாணக்கியர்கள், மேடையில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும்-, வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று, கரடி பொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


விமர்சனம்

கட்சியினருக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:தயாநிதி, கம்பம் செல்வேந்திரன், மஸ்தான், கரூர் சின்னசாமி, பவானி ராஜேந்திரன் ஆகிய, ஐந்து பேரும், 15 பேர் கொண்ட பிரசார பயணத்தில் இணைய இருக்கின்றனர். திருக்குவளையில் இருந்து உதயநிதி, தன் பிரசாரத்தை துவக்கிய வேகத்தில், போலீஸ் துறை கைது செய்கிறது. உதயநிதிக்கே இந்த ஆட்சி பயந்து விட்டதா? டில்லி சாணக்கியர்கள், மேடையில் பேசும் போது, எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும்,- வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று, கரடி பொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது.

தை மாதம், தமிழ் புத்தாண்டு பிறக்கும் பொழுதில், நேரடியாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன். மாநிலத்தில் ஆள்வோரும், அவர்களையும், அவர்களது ஊழல்களையும் தாங்கிப் பிடிக்கும் மத்திய ஆட்சியாளர்களும், நம் வெற்றி பயணத்தை தடுக்க நினைக்கும் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவோம்.இவ்வாறு, அவர் எழுதியுள்ளார்.


பட்டாணி வினியோகம்!



தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு அறிக்கை:தமிழகத்திற்கு நிதியை வாரி வழங்கி விட்டதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். கொரோனாவிற்கு உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் வாங்க, அ.தி.மு.க., அரசு கேட்ட நிதியை தந்தீர்களா?ஜி.எஸ்.டி., வரி வாயிலாக, தமிழகத்தின் ஒட்டு மொத்த வருவாயையும், மத்திய அரசு எடுத்து, ஏதோ பட்டாணி கொடுப்பது போல சில உதவிகளை செய்கிறது.உள்துறை அமைச்சராக இருப்பவரே, இப்படி பேசுவது மிகுந்த வேதனைக்குரியது.

இன்றைக்கு தமிழகம் தான், மத்திய அரசுக்கும்,வட மாநிலங்களுக்கும் நிதி கொடுத்து வருகிறது. ஹிந்தி திணிப்பு, மத துவேஷம் உருவாக்குவது, சமூக நல்லிணக்கத்தை பாழ்படுத்துவது போன்ற துரோகங்களை மட்டும், தமிழகத்திற்கு செய்து வருகிறது. இவை தவிர, தமிழகத்திற்கு நீங்கள் செய்த சாதனை என்ன?இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-நவ-202004:10:12 IST Report Abuse
J.V. Iyer மறுபடியும் தமிழ் நாட்டிற்கு ஊழல் கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் யாருக்குத் தான் அக்கறை இல்லை?
Rate this:
Cancel
Marai Nayagan - Chennai,இந்தியா
24-நவ-202013:52:18 IST Report Abuse
Marai Nayagan பிஜேபியில் பெரும்பாலானவர்கள் சங்கதாள் நல்வழி படுத்தப்பட்டவர்கள். அதற்க்கு சிறந்த உதாரணம் வாஜ்பாயி, அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், மோடி .இவர்கள் எவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை. நேர்மையாக மக்கள் சேவை செய்து வந்தார்கள். ஆனால் இந்த திராவிட முன்னேற்ற கழகம் அதன் வாரிசு அரசியலை ஊழல் செய்வதர்காகவே வளைந்துள்ளது. இதெல்லாம் ஐம்பது ஆண்டுகாலம் மதுவிற்கு அடிமையான திராவிட கழக தொண்டர்களுக்கு சிந்திக்க தெரியாது மற்றும் முடியாது.
Rate this:
Cancel
Venramani Iyer - chennai,இந்தியா
24-நவ-202011:16:13 IST Report Abuse
Venramani Iyer திமுகவின் சில தலைவர்களின் பேச்சை கேட்டாலே யாரும் வோட்டை போடமாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X