அமித் ஷா குற்றச்சாட்டு கரடி பொம்மை நகைச்சுவை: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அமித் ஷா குற்றச்சாட்டு கரடி பொம்மை நகைச்சுவை': ஸ்டாலின்

Updated : நவ 24, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (73)
Share
சென்னை:'டில்லி சாணக்கியர்கள், மேடையில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும்-, வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று, கரடி பொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். விமர்சனம்கட்சியினருக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:தயாநிதி, கம்பம் செல்வேந்திரன், மஸ்தான், கரூர் சின்னசாமி, பவானி
DMK, MK Stalin, AmitShah, Stalin, BJP, ஸ்டாலின், அமித் ஷா, பாஜ, திமுக

சென்னை:'டில்லி சாணக்கியர்கள், மேடையில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும்-, வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று, கரடி பொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


விமர்சனம்

கட்சியினருக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:தயாநிதி, கம்பம் செல்வேந்திரன், மஸ்தான், கரூர் சின்னசாமி, பவானி ராஜேந்திரன் ஆகிய, ஐந்து பேரும், 15 பேர் கொண்ட பிரசார பயணத்தில் இணைய இருக்கின்றனர். திருக்குவளையில் இருந்து உதயநிதி, தன் பிரசாரத்தை துவக்கிய வேகத்தில், போலீஸ் துறை கைது செய்கிறது. உதயநிதிக்கே இந்த ஆட்சி பயந்து விட்டதா? டில்லி சாணக்கியர்கள், மேடையில் பேசும் போது, எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும்,- வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று, கரடி பொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது.

தை மாதம், தமிழ் புத்தாண்டு பிறக்கும் பொழுதில், நேரடியாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன். மாநிலத்தில் ஆள்வோரும், அவர்களையும், அவர்களது ஊழல்களையும் தாங்கிப் பிடிக்கும் மத்திய ஆட்சியாளர்களும், நம் வெற்றி பயணத்தை தடுக்க நினைக்கும் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவோம்.இவ்வாறு, அவர் எழுதியுள்ளார்.


பட்டாணி வினியோகம்!



தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு அறிக்கை:தமிழகத்திற்கு நிதியை வாரி வழங்கி விட்டதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். கொரோனாவிற்கு உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் வாங்க, அ.தி.மு.க., அரசு கேட்ட நிதியை தந்தீர்களா?ஜி.எஸ்.டி., வரி வாயிலாக, தமிழகத்தின் ஒட்டு மொத்த வருவாயையும், மத்திய அரசு எடுத்து, ஏதோ பட்டாணி கொடுப்பது போல சில உதவிகளை செய்கிறது.உள்துறை அமைச்சராக இருப்பவரே, இப்படி பேசுவது மிகுந்த வேதனைக்குரியது.

இன்றைக்கு தமிழகம் தான், மத்திய அரசுக்கும்,வட மாநிலங்களுக்கும் நிதி கொடுத்து வருகிறது. ஹிந்தி திணிப்பு, மத துவேஷம் உருவாக்குவது, சமூக நல்லிணக்கத்தை பாழ்படுத்துவது போன்ற துரோகங்களை மட்டும், தமிழகத்திற்கு செய்து வருகிறது. இவை தவிர, தமிழகத்திற்கு நீங்கள் செய்த சாதனை என்ன?இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X