தெருவில் தேங்கும் மழை நீர்

Added : நவ 22, 2020
Share
Advertisement
அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் முக்கிய தெருவில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.மேல்மலையனுாரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பஸ் நிலையத்திலிருந்து பெரிய தெரு வழியாக பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த பெரிய தெரு, சிமென்ட் சாலையில் மழை நீர் தேங்குவதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இந்த

அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் முக்கிய தெருவில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

மேல்மலையனுாரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பஸ் நிலையத்திலிருந்து பெரிய தெரு வழியாக பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த பெரிய தெரு, சிமென்ட் சாலையில் மழை நீர் தேங்குவதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வடிகால் துார்ந்து போயுள்ளது. இதனால் மழை நீர் செல்வதற்கு வழியில்லாத நிலையில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, சுகாதார சீர்கேடு உண்டாகும் நிலை உள்ளது.ஆக்கிரமிப்பை அகற்றி. துார்வார பொதுமக்கள் சார்பில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

தெருவின் இருபுறமும் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளதுபொது மக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி மேல்மலையனுாருக்கு புகழ் சேர்க்கும் அங்காளம்மன் கோவிலுக்கு செல்லும் பெரிய தெருவின் இரண்டு புறமும் கழிவு நீர் கால்வாய் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X