சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காய்கறி நாற்று, பூச்செடி தட்டுப்பாடு மாதவரம் பண்ணையில் மக்கள் ஏமாற்றம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை : மாதவரம் தோட்டக்கலை பண்ணையில், காய்கறி நாற்றுகள் மற்றும் பூச்செடிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். மாதவரம் பால்பண்ணையில், தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பண்ணை உள்ளது. இங்கு, காய்கறி நாற்றுகள், பூச்செடிகள், பழ மரக்கன்றுகள், மரக்கன்றுகள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டு, குறைந்த விலையில், விற்பனை

சென்னை : மாதவரம் தோட்டக்கலை பண்ணையில், காய்கறி நாற்றுகள் மற்றும் பூச்செடிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

மாதவரம் பால்பண்ணையில், தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பண்ணை உள்ளது. இங்கு, காய்கறி நாற்றுகள், பூச்செடிகள், பழ மரக்கன்றுகள், மரக்கன்றுகள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டு, குறைந்த விலையில், விற்பனை செய்யப்படுகின்றன.சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் ஆர்வமுடன் வந்து, இங்கு காய்கறி நாற்றுகள் மற்றும் பூச்செடிகளை வாங்கி செல்வது வழக்கம்.தற்போது, வடகிழக்கு பருவ மழை காலம் என்பதால், இந்த நேரத்தில் மாடி தோட்டம், வீட்டு தோட்டம் அமைத்தால், செடிகள் நன்றாக வளரும்.

இதனால், பலரும் மாதவரம் தோட்டக்கலைத்துறை பண்ணைக்கு, செடிகள் வாங்குவதற்காக வருகின்றனர்.ஆனால், கத்தரிக்காய் நாற்றுகள் மட்டுமே உள்ளன. மற்ற காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி இன்னும் துவங்கப்படவில்லை. தனியார் நர்சரிரோஜா, மல்லிகை, முல்லை உள்ளிட்ட பூச்செடிகளும் இல்லை. வாழைப் பழக் கன்று மற்றும் பப்பாளி கன்றுகளை தவிர, மற்ற பழ மரக்கன்றுகள் இல்லை. மூலிகை செடிகளும் உற்பத்தி செய்யப்படவில்லை.இதனால், இங்கு செடிகளை வாங்க வரும் பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.ஒவ்வோர் ஆண்டும், தோட்டக்கலை பண்ணையில் நாற்றுகள், பூச்செடிகள் உற்பத்தி செய்வதற்கு, கணிசமான தொகையை அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.

இந்த நிதி முழுமையாக செலவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்து உள்ளது. அதேநேரத்தில், மாதவரம் தோட்டக்கலை பண்ணையை சுற்றி, பல்வேறு இடங்களில், தனியார் நர்சரிகள் அதிகளவில் இயங்கி வருகின்றன.தோட்டக்கலை பண்ணையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், 'பினாமி' பெயர்களில், இந்த நர்சரிகளை நடத்தி வருகின்றனர்.இங்கு, காய்கறி நாற்றுகள், பூச்செடிகள் மட்டுமின்றி, அரியவகை செடிகளும் விற்பனைக்கு கிடைக்கின்றன.வருவாய் பாதிப்புமாதவரம் தோட்டக்கலை பண்ணைக்கு செடிகளை வாங்க வரும் பொதுமக்கள், இந்த நர்சரிகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் பாதிக்கப்படுகிறது.எனவே, மாதவரம் தோட்டக்கலை பண்ணையை இயக்குனர் சுப்பையன் ஆய்வு செய்து, இங்கு பூச்செடிகள், காய்கறி நாற்றுகள் உற்பத்தியை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X