பொது செய்தி

தமிழ்நாடு

67 ஆசிரியர்கள் மீதான '17பி' நோட்டீஸ் ரத்து: முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை

Added : நவ 22, 2020
Share
Advertisement
கோவை:கோவையில், 67 ஆசிரியர்கள் மீதான 17 பி நோட்டீசை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் பரிந்துரையின்படி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரத்து செய்துள்ளனர்.இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கோரி, 2018 நவ., 26ல், மாநிலம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக, ஆயிரத்து 500 ஆசிரியர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.இந்த வழக்கை சென்னை ஐகோர்ட், 2019ம் ஆண்டு, ஜூலை 3ம் தேதி ரத்து செய்து,

கோவை:கோவையில், 67 ஆசிரியர்கள் மீதான 17 பி நோட்டீசை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் பரிந்துரையின்படி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரத்து செய்துள்ளனர்.இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கோரி, 2018 நவ., 26ல், மாநிலம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக, ஆயிரத்து 500 ஆசிரியர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கை சென்னை ஐகோர்ட், 2019ம் ஆண்டு, ஜூலை 3ம் தேதி ரத்து செய்து, தீர்ப்பு வழங்கியது. தொடர்ந்து, பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் மீதான, '17 பி' வாபஸ் பெறப்பட்டது. இதை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள் மீதான 17 பி ரத்து செய்யப்பட்டது.ஆசிரியர்கள் பல முறை வலியுறுத்தியும், கோவை மாவட்டத்தில்,67 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 17 பி நோட்டீஸ் ரத்து செய்யப்படாமல் இருந்தது.
இதைக் கண்டித்து, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில், கடந்த நவ., 9ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பெருந்திரள் முறையீடு நடத்தினர்.இதில், 67 ஆசிரியர்களும் தனித்தனியாக நோட்டீசை ரத்து செய்ய கோரி, முதன்மை கல்வி அலுவலர் உஷாவிடம் மனுக்களை சமர்ப்பித்தனர். முதன்மை கல்வி அலுவலரின் நடவடிக்கையால், கடந்த10ம்தேதி கோவை மாவட்டத்தின் நகரம், எஸ்.எஸ்.குளம், பொள்ளாச்சி, பேரூர் கல்வி மாவட்டங்களை சேர்ந்த, 67 ஆசிரியர்கள் மீதான 17 பி நோட்டீசை, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் ரத்து செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X