அரசு பஸ் நிறுத்தம்; பொது மக்கள் அவதி

Added : நவ 22, 2020
Share
Advertisement
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டுக்கு வடலுார் அரசு பணிமனையில் இருந்து இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.வடலுார் அரசு பணிமனையில் இருந்து குறிஞ்சிப்பாடி, சத்திரம், பத்திரக்கோட்டை வழியாக நடுவீரப்பட்டுக்கு அரசு பஸ் (தடம் எண்15-ஏ) பாலுாருக்கு (தடம் எண் 148) இயக்கப்பட்டது. இந்த பஸ்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக இயக்கப்படவில்லை. அதன் பிறகு

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டுக்கு வடலுார் அரசு பணிமனையில் இருந்து இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

வடலுார் அரசு பணிமனையில் இருந்து குறிஞ்சிப்பாடி, சத்திரம், பத்திரக்கோட்டை வழியாக நடுவீரப்பட்டுக்கு அரசு பஸ் (தடம் எண்15-ஏ) பாலுாருக்கு (தடம் எண் 148) இயக்கப்பட்டது. இந்த பஸ்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக இயக்கப்படவில்லை. அதன் பிறகு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும், இதுவரை இயக்கப்படாமல் உள்ளது.

இந்த வழிதடத்தில் இயக்கப்பட்ட ஒரே பஸ் இது மட்டுமே.இந்த பஸ் இயக்கப்படாததால் பாலுாரை சேர்ந்தவர்கள் குறிஞ்சிப்பாடிக்கு கடலுார் சென்று அங்கிருந்து பஸ் பிடித்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் நேரம் விரயமாவதுடன், கூடுதல் செலவாகிறது. எனவே, நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க, போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X