பொது செய்தி

தமிழ்நாடு

அதிக குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனைக்கு முதல் பரிசு!

Added : நவ 22, 2020
Share
Advertisement
கோவை:அதிக குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்ததால்,கோவை அரசு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தது.அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் குழந்தைகளின்

கோவை:அதிக குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்ததால்,கோவை அரசு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தது.அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் குழந்தைகளின் அடிப்படையில், மருத்துவமனைகள் 'ஏ', 'பி', 'சி' என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.இதில் 'ஏ' பிரிவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், கடந்தாண்டு அதிக குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தது, சிகிச்சை, குழந்தைகள் குணமடையும் விகிதம்ஆகியவற்றின் அடிப்படையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது.இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை, சென்னை ஒருங்கிணைந்த மகப்பேறியல், குழந்தைகள் சிகிச்சை மையம், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் பிடித்துள்ளன.சுகாதாரத் துறை மற்றும் மாநில பச்சிளம் குழந்தைகள் ஒருங்கிணைப்பு மையத்தின் சார்பில், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசினை வழங்கினார்.கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவின் தலைவர் பூமா கூறியதாவது:கோவை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் குறை பிரசவம், எடை குறைவு, பிறவி குறைபாடு, நோய்த்தொற்றுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் இருந்தும் குழந்தைகள் பரிந்துரைக்கப்படுகின்றனர். சராசரியாக தினமும், 10 குழந்தைகள் வரை அனுமதிக்கப்படுகின்றனர்.கடந்தாண்டு, 4,807 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகள் அனுமதி, சிகிச்சை, விரைந்து குணமடைதல், குணமடையும் குழந்தைகளின் சதவீதம் ஆகியவற்றின் கீழ், சிறப்பான செயல்பாட்டுக்காக, முதல்பரிசு அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X