பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி தினம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த குறிஞ்சிக்குடியில் அங்கன்வாடி தினம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.கடலுார் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி, மாவட்ட திட்ட அதிகாரி பழனி தலைமை தாங்கினார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுரேஷ், வட்டார அலுவலர் சுடர்கொடி முன்னிலை வகித்தனர். தமிழன் சமூக கல்வி அறக்கட்டளை இயக்குனர் பெரியார்தாசன்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த குறிஞ்சிக்குடியில் அங்கன்வாடி தினம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

கடலுார் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி, மாவட்ட திட்ட அதிகாரி பழனி தலைமை தாங்கினார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுரேஷ், வட்டார அலுவலர் சுடர்கொடி முன்னிலை வகித்தனர். தமிழன் சமூக கல்வி அறக்கட்டளை இயக்குனர் பெரியார்தாசன் வரவேற்றார். நிகழ்ச்சியை சேத்தியாத்தோப்பு ரிசோர்ஸ் பவுன்டேஷன் நிறுவனர் வேளாங்கண்ணி அறிமுகம் செய்தார்.

ஊராட்சி தலைவர்கள் மழவராயநல்லுார் பிருந்தாவதி வரதராஜன், முடிகண்டநல்லுார் சுசிபாலசவுந்தரிபத்மநாபன், வலசக்காடு அனில்குமார், நந்தீஸ்வரமங்கலம் பிரேமலதா சிவபதி ஆகியோர் அங்கன்வாடி பணியாளர்களை கவுரவப்படுத்தினர்.

ஒரத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன், பெண்ணாடம் இயன்முறை மருத்துவர் உமாபதி, இந்திய தொழுநோய் சேவை அறக்கட்டளை ஜெயராஜ், சாந்தி, அன்புகாந்தி கருத்துரை வழங்கினார்.கலைநிகழ்ச்சி நடந்தது. சிவக்குமார் நன்றி கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X