சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் விசாரணை கைதிக்கு கொரோனா; தெறித்து ஓடிய போலீசார், பொதுமக்கள்

Added : நவ 22, 2020
Share
Advertisement
விழுப்புரம் : மகளிர் போலீஸ் நிலைய பாதுகாப்பில் இருந்த, பெண் விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாதா கோவில் பஸ் நிறுத்தம் அருகே மகளிர் போலீஸ் நிலையம் உள்ளது. இந்நிலையில், திருவெண்ணெய்நல்லுார் அருகே நடந்த கொலை வழக்கு ஒன்றின் பெண் விசாரணை கைதியை, இந்த போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் போலீசார் பாதுகாப்பில்
 பெண் விசாரணை கைதிக்கு கொரோனா; தெறித்து ஓடிய போலீசார், பொதுமக்கள்

விழுப்புரம் : மகளிர் போலீஸ் நிலைய பாதுகாப்பில் இருந்த, பெண் விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாதா கோவில் பஸ் நிறுத்தம் அருகே மகளிர் போலீஸ் நிலையம் உள்ளது. இந்நிலையில், திருவெண்ணெய்நல்லுார் அருகே நடந்த கொலை வழக்கு ஒன்றின் பெண் விசாரணை கைதியை, இந்த போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் போலீசார் பாதுகாப்பில் வைத்திருந்தனர்.முன்னதாக, விசாரணைக்கு அழைத்து வந்தபோது பெண் கைதிக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான முடிவு நேற்று வெளியானபோது, பெண் கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை மருத்துவமனையில் இருந்து, போலீஸ் நிலையத்திற்கு தெரிவித்தனர்.இதையறிந்த, பெண் போலீசார் மற்றும் புகார் மனு விசாரணைகளுக்காக வந்திருந்த பொதுமக்கள் அங்கிருந்து வேக, வேகமாக தெறித்து ஓடினர்.

பின் ஆம்புலன்ஸ் மூலம் பெண் கைதி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து, சுகாதார ஊழியர்கள் மூலம் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.இச்சம்பவத்தால், போலீஸ் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X