சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவேறு இடங்களில் திருட்டு

Added : நவ 22, 2020
Share
Advertisement
சேலையூர் : சேலையூரில், இருவேறு இடங்களில் நடந்த திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை அடுத்த கிழக்கு தாம்பரம், வால்மீகி தெருவில், தனியார் 'காஸ்' ஏஜன்சி இயங்கி வருகிறது. இங்கு, பணிபுரியும் ஊழியர்கள், நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல், அலுவலகத்தை மூடிவிட்டு, வீட்டிற்கு சென்றனர்.நேற்று காலை, வந்தபோது, அலுவலகத்தின் முன்பக்க கதவு

சேலையூர் : சேலையூரில், இருவேறு இடங்களில் நடந்த திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை அடுத்த கிழக்கு தாம்பரம், வால்மீகி தெருவில், தனியார் 'காஸ்' ஏஜன்சி இயங்கி வருகிறது. இங்கு, பணிபுரியும் ஊழியர்கள், நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல், அலுவலகத்தை மூடிவிட்டு, வீட்டிற்கு சென்றனர்.நேற்று காலை, வந்தபோது, அலுவலகத்தின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 1.80 லட்சம் ரூபாய் திருடப்பட்டு இருந்தது தெரிந்தது.l காமராஜபுரம், தனபால் தெருவைச் சேர்ந்த, தனியார் கல்லுாரி நுாலக ஊழியர், செந்தில், 50, என்பவர், 19ம் தேதி, சுபநிகழ்ச்சியில் பங்கேற்க, கடலுாருக்கு சென்றார்.அவரது வீட்டின் பீரோவையும் உடைத்து, 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 5 சவரன் நகைகள் திருடப்பட்டன. இந்த இருவேறு சம்பவங்கள் குறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X