சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டீக்கடையில் மர்மநபர்கள்

Added : நவ 22, 2020
Share
Advertisement
செங்குன்றம் : நள்ளிரவில், டீக்கடையின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், அங்கிருந்த பன், பிஸ்கட்டை சாப்பிட்டு, பணம், சிகரெட் உள்ளிட்டவற்றை திருடி சென்றனர். சென்னை, செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார், ஜோதி நகர், நான்காவது தெருவைச் சேர்ந்தவர் காஜாமைதீன், 43. இவர், தன் மாடி வீட்டின் கீழ் தளத்தில், டீக்கடை வைத்துள்ளார்.நேற்று அதிகாலை, 4:30 மணி அளவில், கடையை திறக்க சென்றபோது, பூட்டு

செங்குன்றம் : நள்ளிரவில், டீக்கடையின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், அங்கிருந்த பன், பிஸ்கட்டை சாப்பிட்டு, பணம், சிகரெட் உள்ளிட்டவற்றை திருடி சென்றனர்.

சென்னை, செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார், ஜோதி நகர், நான்காவது தெருவைச் சேர்ந்தவர் காஜாமைதீன், 43. இவர், தன் மாடி வீட்டின் கீழ் தளத்தில், டீக்கடை வைத்துள்ளார்.நேற்று அதிகாலை, 4:30 மணி அளவில், கடையை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையில் வைத்திருந்த, 2,000 ரூபாய் மற்றும், 1,500 ரூபாய் மதிப்பிலான சிகரெட்டுகள் திருடு போயிருந்தன.கடையில், 'ஆட்டை' போட்ட மர்ம நபர்கள், அங்கிருந்த, பன், பிஸ்கட்டையும் சாப்பிட்டு சென்றுள்ளனர். இது குறித்து, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X