பொது செய்தி

தமிழ்நாடு

பனை விதை நடும் நிகழ்ச்சி

Added : நவ 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பசுமை கிராம குழு சார்பில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த காரப்பட்டு, டி.குமாரமங்கலம், மேல்தணியாலம்பட்டு ஆகிய மலட்டாறு பகுதியில் நேற்று 11வது வாரத்தையொட்டி பசுமை கிராம குழுவினர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனைவிதைகளை டாக்டர் ரமேஷ், பசுமை ஆர்வலர்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பசுமை கிராம குழு சார்பில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த காரப்பட்டு, டி.குமாரமங்கலம், மேல்தணியாலம்பட்டு ஆகிய மலட்டாறு பகுதியில் நேற்று 11வது வாரத்தையொட்டி பசுமை கிராம குழுவினர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனைவிதைகளை டாக்டர் ரமேஷ், பசுமை ஆர்வலர் ராஜசேகர் ஆகியோர் தலைமையில் நட்டனர்.

இதில் குழு ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன், அன்பரசன், சசிகுமார், பாலுபாஸ்கர், செந்தில், ஊராட்சி செயலாளர் ராஜசேகர், அருண்குமார் உள்ளிட்ட பசுமை ஆர்வலர்கள், பசுமை குழுவினர், கிராம இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-நவ-202015:19:36 IST Report Abuse
Ram Pollachi தென்னையை வைத்தவன் தின்னுட்டு சாவான், பனையை வைத்தவன் பார்த்துவிட்டு சாவான். சுமார் நூறு அடி உயரம் வளரும், நூற்று இருபது வருடம் உயிர் வாழும். இந்தியாவில் ஐம்பது விழுக்காடுக்கு மேல் பனை மரம் உள்ள மாநிலம் தமிழ்நாடு! வேர் முதல் ஓலை வரை அனைத்தும் பயன்படக் கூடியவை. பனை வளர்ப்போம்! பயன் பெறுவோம்!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X