பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ ரயில் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை : கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, உயர் நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில், நேற்று நடந்தது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொது மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணியருக்கும், மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது பாதுகாப்பானது என்ற, பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.இதற்காக, மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில்,

சென்னை : கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, உயர் நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில், நேற்று நடந்தது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொது மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணியருக்கும், மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது பாதுகாப்பானது என்ற, பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.இதற்காக, மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை, 'நிமிர்வு கலையகம்' என்ற அமைப்புடன் இணைந்து நடத்த முடிவு செய்தது.

இதன்படி, மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணி முதல், இரவு, 8:30 மணி வரையும், உயர் நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில், நேற்று காலை, 10:00 மணி முதல், 11:00 மணி வரையும், பறையாட்டம் நிகழ்ச்சி நடந்தது. இந்த கலை நிகழ்ச்சியை, பொது மக்கள் மற்றும் மெட்ரோ பயணியர் கண்டு ரசித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X