சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

Added : நவ 22, 2020
Share
Advertisement
மாதவரம் : மாதவரம் பகுதியில், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர், கைது செய்யப்பட்டனர். சென்னை, மாதவரம் பால்பண்ணை சுற்றுவட்டாரங்களில், மொபைல் போன் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறின. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், தனிப்படை போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.நேற்று முன்தினம் இரவு, மாதவரம் பால்பண்ணை போலீசார், மாத்துார் அருகே, பால்பண்ணை சாலை

மாதவரம் : மாதவரம் பகுதியில், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர், கைது செய்யப்பட்டனர்.

சென்னை, மாதவரம் பால்பண்ணை சுற்றுவட்டாரங்களில், மொபைல் போன் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறின. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், தனிப்படை போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.நேற்று முன்தினம் இரவு, மாதவரம் பால்பண்ணை போலீசார், மாத்துார் அருகே, பால்பண்ணை சாலை சந்திப்பில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு பேரை, சோதனைக்காக நிறுத்தினர்.

அதில், இருவர் தப்பினர்; இருவர் சிக்கினர். அவர்களிடம், போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள், செங்குன்றம் அடுத்த காந்தி நகர், ஆலமரம் எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர், 19. பாடியநல்லுார் பி.டி.மூர்த்தி நகரைச் சேர்ந்த மனோஜ், 18, என்பதும், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களது கூட்டாளிகளான அஜித், கார்த்திக் ஆகியோரையும் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X