பொது செய்தி

தமிழ்நாடு

பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபட வேண்டும்: பாண்டியன் எம்.எல்.ஏ.,

Added : நவ 22, 2020
Share
Advertisement
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் நகர அ.தி.மு.க., சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.நகர செயலர் மாரிமுத்து தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய செயலர் ராசாங்கம், மாவட்ட பாசறை செயலர் சண்முகம், சேர்மன் கருணாநிதி முன்னிலை வகித்தனர். ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம் வரவேற்றார். புதிய உறுப்பினர்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் நகர அ.தி.மு.க., சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

நகர செயலர் மாரிமுத்து தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய செயலர் ராசாங்கம், மாவட்ட பாசறை செயலர் சண்முகம், சேர்மன் கருணாநிதி முன்னிலை வகித்தனர். ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம் வரவேற்றார். புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை, அ.தி.மு.க., கடலுார் கிழக்கு மாவட்ட செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பேசுகையில்,'கிராம மக்களின் வளர்ச்சிக்காக, பாடுப்பட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர், விட்டுச்சென்ற பணிகளை, முதல்வர் பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் நிறைவேற்றி வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு தேவையான சாலை வசதி, குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை, நிறைவேற்றி கொடுத்துள்ளேன். தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபட வேண்டும்' என்றார்.விழாவில், மாவட்ட மீனவரணி செயலர் வீராசாமி, கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், முன்னாள் ஜமா அத் தலைவர் செய்யது ஆரீப், இளைஞரணி செயலர் சங்கர், அவைத் தலைவர் மலைமோகன், நிர்வாகிகள் சக்கரவர்த்தி, ஜெய்சங்கர், கணேசன், இக்பால், ரயில்வே பாஸ்கர், தமிழரசன், சிவக்குமார், நாகராஜ், தொழில் நுட்ப பொருளாளர் சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X