பொது செய்தி

தமிழ்நாடு

ஏரிக்கரையை பாதுகாக்க பனை விதை நடவு

Added : நவ 22, 2020
Share
Advertisement
தாம்பரம் : புது தாங்கல் ஏரிக்கரையை பாதுகாக்க, ஏரி புனரமைப்பு குழுவினரால், பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. தாம்பரம் நகராட்சியில், சென்னை புறவழிச்சாலையை ஒட்டி அமைந்துள்ள, புது தாங்கல் ஏரி, அரசு துறைகளின் ஆக்கிரமிப்புகளுடன், தனியாரின் ஆக்கிரமிப்புகளால், 70 ஏக்கரில் இருந்து, 15 ஏக்கராக சுருங்கியது.இதையடுத்து, நீர்நிலைகளை சீரமைக்க, 'களமிறங்குவோம்; நமக்கு நாமே' என,

தாம்பரம் : புது தாங்கல் ஏரிக்கரையை பாதுகாக்க, ஏரி புனரமைப்பு குழுவினரால், பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

தாம்பரம் நகராட்சியில், சென்னை புறவழிச்சாலையை ஒட்டி அமைந்துள்ள, புது தாங்கல் ஏரி, அரசு துறைகளின் ஆக்கிரமிப்புகளுடன், தனியாரின் ஆக்கிரமிப்புகளால், 70 ஏக்கரில் இருந்து, 15 ஏக்கராக சுருங்கியது.இதையடுத்து, நீர்நிலைகளை சீரமைக்க, 'களமிறங்குவோம்; நமக்கு நாமே' என, நலச்சங்கங்கள், தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்து, நம் நாளிதழில், 2019ல் அறிவிப்பு வெளியானது. இதன்பின், ஏரியை துார் வார நகராட்சியின், 38வது வார்டைச் சேர்ந்த, நலச்சங்கத்தினர் இணைந்து, 'புதுதாங்கல் ஏரி புனரமைப்பு குழு' என்ற, புது அமைப்பை ஏற்படுத்தின.

தொடர்ந்து, நலச்சங்கங்களுடன் இணைந்து, 'கேர் எர்த் பவுண்டேஷன்' என்ற, தொண்டு நிறுவனமும் ஏரியை துார் வாரியது.கடந்த, 20 ஆண்டுகளுக்கு பின், ஏரி துார் வாரப்பட்டதால், கடந்தாண்டு இறுதியில், ஏரி நிரம்பியது. இதையடுத்து, ஏரியின் சுற்றுவட்டார, நிலத்தடி நீர்மட்டமும் ஓரளவு உயர்ந்தது.தற்போது, ஏரியின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், கரைகளை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், நேற்று, 50 பனை விதைகளும், பூவரசு, வேப்பம், புங்கை என, 50 மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டன. இதில், பொதுப் பணித்துறை, உதவி பொறியாளர் குஜராஜ், தாம்பரம் நகராட்சி பொறியாளர் கணேசன் மற்றும் நலச்சங்கத்தினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X