பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சேர்க்கை முகாம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
விருத்தாசலம : விருத்தாசலம் தொகுதியில் நடந்த வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாமை, மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழிதேவன் பார்வையிட்டு, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சிறப்பு முகாம் துவங்கியது. அதில், விருத்தாசலம் நகரம், மங்கலம்பேட்டை பேரூர் மற்றும் விருத்தாசலம், நல்லுார்,

விருத்தாசலம : விருத்தாசலம் தொகுதியில் நடந்த வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாமை, மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழிதேவன் பார்வையிட்டு, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சிறப்பு முகாம் துவங்கியது. அதில், விருத்தாசலம் நகரம், மங்கலம்பேட்டை பேரூர் மற்றும் விருத்தாசலம், நல்லுார், கம்மாபுரம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 282 ஓட்டுச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர்கள் இணைப்பு பணி தீவிரமாக நடக்கிறது. இதனை, அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழிதேவன் பார்வையிட்டு, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அப்போது, கூட்டணி கட்சியினரின் நிர்வாகிகளை அரவணைத்து, புதிய வாக்காளர்களை இணைக்கும் பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினார்.கலைச்செல்வன் எம்.எல்.ஏ., நகர செயலர் சந்திரகுமார், ஜெ., பேரவை மாவட்ட செயலர் ரவிச்சந்திரன், முன்னாள் நகராட்சித் தலைவர் அருளழகன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மணிவண்ணன், பாசறை மாவட்ட செயலர் ரமேஷ், மாவட்ட தலைவர் அருண், கம்மாபுரம் ஒன்றியம் கனகசிகாமணி, நிர்வாகிகள் செல்வகணபதி, சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X