விருத்தாசலம : விருத்தாசலம் தொகுதியில் நடந்த வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாமை, மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழிதேவன் பார்வையிட்டு, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சிறப்பு முகாம் துவங்கியது. அதில், விருத்தாசலம் நகரம், மங்கலம்பேட்டை பேரூர் மற்றும் விருத்தாசலம், நல்லுார், கம்மாபுரம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 282 ஓட்டுச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர்கள் இணைப்பு பணி தீவிரமாக நடக்கிறது. இதனை, அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழிதேவன் பார்வையிட்டு, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அப்போது, கூட்டணி கட்சியினரின் நிர்வாகிகளை அரவணைத்து, புதிய வாக்காளர்களை இணைக்கும் பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினார்.கலைச்செல்வன் எம்.எல்.ஏ., நகர செயலர் சந்திரகுமார், ஜெ., பேரவை மாவட்ட செயலர் ரவிச்சந்திரன், முன்னாள் நகராட்சித் தலைவர் அருளழகன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மணிவண்ணன், பாசறை மாவட்ட செயலர் ரமேஷ், மாவட்ட தலைவர் அருண், கம்மாபுரம் ஒன்றியம் கனகசிகாமணி, நிர்வாகிகள் செல்வகணபதி, சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE