பொது செய்தி

தமிழ்நாடு

வானின் நீல வர்ணத்தையே

Added : நவ 22, 2020
Share
Advertisement
- நமது நிருபர் - காலை, 5:00 மணியிருக்கும், வானின் நீல வர்ணம், திடீரென பச்சை நிறத்திற்கு மாறிவிட்டதோ, என எண்ணத் தோன்றும்படி, ஆயிரக்கணக்கான பச்சைக்கிளிகள் கூட்டம், சென்னையில் ஒரு வீட்டின் மொட்டை மாடிக்கு திரள்கிறது.சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, ஐயா முதலி தெருவின் கடைசியில், கூவத்தை ஒட்டியுள்ளது, அந்த வீடு.அந்த வீட்டின் உரிமையாளர் சுதர்ஷன் ஷா என்பவர், மொட்டை மாடியில்,

- நமது நிருபர் - காலை, 5:00 மணியிருக்கும், வானின் நீல வர்ணம், திடீரென பச்சை நிறத்திற்கு மாறிவிட்டதோ, என எண்ணத் தோன்றும்படி, ஆயிரக்கணக்கான பச்சைக்கிளிகள் கூட்டம், சென்னையில் ஒரு வீட்டின் மொட்டை மாடிக்கு திரள்கிறது.சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, ஐயா முதலி தெருவின் கடைசியில், கூவத்தை ஒட்டியுள்ளது, அந்த வீடு.அந்த வீட்டின் உரிமையாளர் சுதர்ஷன் ஷா என்பவர், மொட்டை மாடியில், கிளிகளுக்கென, ஊறவைத்த அரிசி மற்றும் நிலக்கடலையை, ஆங்காங்கே வைத்துள்ளார்.

கிளிகளும் கூட்டம் கூட்டமாய் வந்து, அதை ஆசையோடு சாப்பிடுகின்றன. மேலும், அவை இளைப்பாறவும், சந்தோஷமாய் ஆடுவதற்கெனவும், மாடியில் பல இடங்களில் கயிறுகளை தொங்கவிட்டுள்ளார், சுதர்ஷன் ஷா. இரையை சாப்பட்டபடி, கீச்... கீச்... என, அவை எழுப்பும் சத்தத்தை, ஒரு தவம் போல் பார்த்துக் கொண்டு இருக்கும் சுதர்ஷன் ஷா - -வித்யா தம்பதிக்கோ, சந்தோஷத்தால் மனம் நிறைகிறது.சுதர்ஷன் ஷாவின் தந்தை, மறைந்த வெங்கு ஷா தான், விலங்குகள், பறவைகள் மீது பாசம் வைக்க, மகனுக்கு கற்றுக் கொடுத்தவர்.பறவைகளை மகிழ்ச்சிப்படுத்தினால், தந்தையை சந்தோஷப்படுத்தியது போலாகும் என்பதற்காக, 10 ஆண்டுகளுக்கு முன், வீட்டின் மாடியில் பறவைகளுக்கு இரை வைக்க ஆரம்பித்தார்.

இன்றும், நாள் தவறாமல், அதை தொடர்கிறார் என்பதே ஆச்சரியம்.எல்லா பறவைகளுக்கும், பொதுவாகத் தான் சாப்பாடு வைத்தார். ஆனால், கிளிகள் தான், 10 - 100 என ஆரம்பித்து, இன்று, 3,000க்கும் மேற்பட்ட கிளிகள் வரை வந்து சாப்பிட்டு செல்கின்றன.காலை, 6:00 மணிக்கு ஒருமுறையும், மாலை, 4:00 மணிக்கு ஒரு முறையும் என, ஒரு நாளைக்கு, இரு முறை உணவும், தண்ணீரும் வைக்கிறார்.ஆனால், ஊறவைத்த அரிசியிலேயே தண்ணீர் இருப்பதால், கிளிகள் தண்ணீரை சீண்டுவதேயில்லை. வியாபாரியான இவர், தன் வருமானத்தில், 40 சதவீதம், இதற்காக ஒதுக்கிவிடுகிறார். யாரிடமும் இதற்காக உதவி எதிர்பார்ப்பது இல்லை.

ஆனால், இந்த புண்ணியத்தில், எங்களுக்கும் பங்கு கொடுங்கள் என, விரும்பிக் கேட்டு சில உறவுகளும் நட்புகளும், அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரும்போது ஏற்றுக் கொள்கிறார்.இதற்காக மட்டும், இவரது நாள், காலை, 4:00 மணிக்கே விடிந்துவிடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாய் பிரித்து சாப்பாடு வைப்பதற்கு, ஒரு மணி நேரத்திற்கு மேலாகிவிடுகிறது.மாலை நேரத்தில், மனைவியும் தாய் சரோஜினியின் உதவியும், சுதர்ஷன் ஷாவிற்கு, உற்சாகத்தை தருகிறது. கிளிகளுக்கு சாப்பாடு வைக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக, கடந்த, 10 ஆண்டுகளாக, இவர் வெளியூர் எங்கும் போனதில்லை; அதற்காக வருத்தப்படுவதும் இல்லை.

மழையானாலும், குளிரானாலும், வெயிலானாலும், என் வீட்டிற்கு எங்கிருந்தோ வரும் இந்தக் கிளி கூட்டம், வெறும் சாப்பாட்டிற்கு வருவதாக நான் நினைக்கவில்லை.என்னையும், என் குடும்பத்தையும் ஆசீர்வதிக்கவே வருவதாக எண்ணுகிறேன் என்று, வார்த்தைகளிலும் கண்களிலும், சந்தோஷத்தை நிரப்பி பேசும், பாசக்கார சுதர்சனிடம் நீங்கள் பேச, 90420 48481 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X