பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி தோட்டம் அமைப்பது தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு

Added : நவ 22, 2020
Share
Advertisement
கடலுார் : பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைப்பது தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் பேசினார்.கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து சத்துணவு மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சந்திரசேகர சகாமுகரி தலைமை தாங்கி கூறியதாவது:கடலுார் மாவட்டத்தில் நகர் மற்றும் ஊரகப் புறங்களில் மொத்தம் 1585 சத்துணவு

கடலுார் : பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைப்பது தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் பேசினார்.

கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து சத்துணவு மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சந்திரசேகர சகாமுகரி தலைமை தாங்கி கூறியதாவது:கடலுார் மாவட்டத்தில் நகர் மற்றும் ஊரகப் புறங்களில் மொத்தம் 1585 சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் சத்துணவு மையங்களில் உணவு சாப்பிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்க அறிவுரை வழங்கப்பட்டது. 1585 பள்ளிகளிலும் காய்கறி தோட்டம் அமைப்பது தொடர்பாக மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சத்துணவு மையங்களை துாய்மையாக பராமரிக்கவும், கவனமுடன் செயல்பட வேண்டும். சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சிறு பழுதுகள் அனைத்தும் வரும் 29ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். சத்துணவு மையங்களில் உலர் உணவுப்பொருட்கள் மற்றும் முட்டைகள் வழங்குவதில் குறைபாடுகள் ஏதுமின்றி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X