பொது செய்தி

தமிழ்நாடு

இனி நகரின் மத்தியில் போட்டி!

Added : நவ 22, 2020
Share
Advertisement
பதவியேற்று சில மாதங்களே ஆனாலும், பல ஆண்டு அனுபவத்துடன் பக்குவமாக பேசுகிறார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) ஜெசிந்த் கிரேஸ்லின். பள்ளிகள் திறந்ததும் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் அத்தனை பேருக்கும், தங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அளிக்க காத்திருக்கிறார் இவர்.அரசு பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தவும், அவர்கள் விளையாட்டில் சாதனை படைக்கவும் என்ன

பதவியேற்று சில மாதங்களே ஆனாலும், பல ஆண்டு அனுபவத்துடன் பக்குவமாக பேசுகிறார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) ஜெசிந்த் கிரேஸ்லின். பள்ளிகள் திறந்ததும் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் அத்தனை பேருக்கும், தங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அளிக்க காத்திருக்கிறார் இவர்.அரசு பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தவும், அவர்கள் விளையாட்டில் சாதனை படைக்கவும் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?அரசு பள்ளியில் விளையாட்டில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளை கண்டறியும் பொறுப்பு உடற்கல்வி ஆசிரியர்களிடம் உள்ளது. பள்ளிகள் திறந்த பிறகு, இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.கிராமப்புறங்களில் விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல், பல மாணவர்கள் தவிக்கின்றனர். அவர்களை ஊக்கப்படுத்த பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். வசதியானவர்களிடம் 'ஸ்பான்சர்' பெற்று, தேவையான பொருட்களை வாங்கி கொடுக்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும்.அரசு சார்பில், குறுமையம், கூட்டு குறுமையம், வருவாய் மாவட்டம் போன்ற விளையாட்டு போட்டிகளுக்கு, போதுமான நிதி ஒதுக்கப்படுகிறதா?கண்டிப்பாக இல்லை. நிதி பற்றாக்குறையால் தான் அரசு பள்ளிகளில் போட்டிகளை நடத்த முன்வருவதில்லை. புது வகை விளையாட்டுகள், குழு விளையாட்டுகள் என, 20க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்த வேண்டும். நடுவர்களுக்கு ஊதியம், உணவு என பல செலவுகள் உள்ளன. பல அரசு பள்ளிகள் 'ஸ்பான்சர்களை' தேடி அலைய வேண்டியுள்ளது. ஆனால், தனியார் பள்ளிகளுக்கு நிதி பிரச்னை ஒரு பொருட்டல்ல.அரசு சார்பில் நடத்தப்படும் போட்டிகள் ஏன், தனியார் கல்லுாரி மைதானங்களில் நடத்தப்படுகின்றன? நகரின் மையத்தில் போட்டிகளை நடத்தினால், தொலைதுாரத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு சிரமம் இருக்காதே...?உண்மைதான். இதனால், அரசு பள்ளி மாணவர்கள் தான் முதலில் பாதிக்கப்படுகின்றனர். தனியார் பள்ளி நிர்வாகங்கள் எத்தனை முறை வேண்டுமென்றாலும், பஸ்களை இயக்கி மாணவர்களை வேண்டிய இடத்தில் இறக்கி விடுகின்றனர். போட்டி நடத்தப்படும் கல்லுாரிகள், போக்குவரத்து வசதி அமைத்து தரப்படும் என்கின்றனர். இதுவரை அப்படி வசதி செய்து தந்ததாக தெரியவில்லை. வரும், நாட்களில் போட்டிகள் அனைத்தும், நகரின் மையப்பகுதியில் நடத்த திட்டமிடப்படும்.உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, அரசு ஒதுக்கும் நடுவர் பணிக்கான ஊதிய தொகை சரியாக அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?கடந்த ஆண்டு சரியாக வழங்கப்பட்டது. அதற்கு முன் என்ன நடந்தது என தெரியாது. வரும் ஆண்டுகளில் எந்த ஒரு முறைகேடுமின்றி வழங்கப்படும்.அரசு பள்ளிகளில் புது வகையான விளையாட்டு போட்டிகளுக்கு, தக்க உபகரணங்கள் இல்லாமல் மிகுந்த சிரமப்படுகின்றனர். என்ன செய்ய போகிறீர்கள்?பாட்மின்டன், டேபிள் டென்னிஸ், வாள்சண்டை, டேக்வாண்டோ போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்க, விளையாட்டு உபகரணங்கள் இல்லாததால், இப்போட்டிகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. எஸ்.ஜி.எப்.ஐ., மற்றும் கேலோ இந்தியா போட்டிகளில் வெற்றி பெற்றால், ரூ.2 லட்சம் வரை கிடைக்கிறது. அந்த தொகையை அரசு பள்ளிகளுக்கும், மைதானம் மேம்படுத்துவதற்கும் ஒதுக்கினால், சிறந்த வீரர்களை உருவாக்க முடியும்.பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டில் சாதனை படைக்க என்ன செய்ய வேண்டும் ?முதலில் விளையாட்டு வீரர்களுக்கு, பள்ளிகளில் மரியாதை தர வேண்டும். பயிற்சிக்காக இரண்டு பாடப்பிரிவு கேட்டால், அவ்வளவு சண்டை. அவர்கள் ஜூன் முதல் செப்., வரை தான் விளையாட போகிறார்கள். பின்னர், படிப்பில் தான் கவனம் இருக்கும். எந்த பள்ளியிலும் விளையாட்டு வீரர்களால், 'ரிசல்ட்' போனதாக பார்த்தது இல்லை. பெற்றோர்களும், குழந்தைகளின் மீது நம்பிக்கை வைத்து விளையாட்டு மைதானங்களுக்கு அனுப்ப வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X