பொது செய்தி

தமிழ்நாடு

குறிஞ்சிப்பாடி பகுதியில் மணிலா விதைப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
குறிஞ்சிப்பாடி : அயன் குறிஞ்சிப்பாடி விவசாயிகள் தங்கள் பகுதியில், நான்கு வழிகளில் மணிலா விதைப்பு செய்கின்றனர்.வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் அயன் குறிஞ்சிப்பாடி உழவர்மன்ற விவசாயிகள், பல்வேறு முறைகளை பயன்படுத்தி மணிலா பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்த ஆண்டு, நான்கு முறைகளில் மணிலா பயிர் சாகுபடி நடப்பதாக அவர்கள் கூறுகின்றனர். பாரம்பரிய முறைப்படி, களை கொத்தியை

குறிஞ்சிப்பாடி : அயன் குறிஞ்சிப்பாடி விவசாயிகள் தங்கள் பகுதியில், நான்கு வழிகளில் மணிலா விதைப்பு செய்கின்றனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் அயன் குறிஞ்சிப்பாடி உழவர்மன்ற விவசாயிகள், பல்வேறு முறைகளை பயன்படுத்தி மணிலா பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்த ஆண்டு, நான்கு முறைகளில் மணிலா பயிர் சாகுபடி நடப்பதாக அவர்கள் கூறுகின்றனர். பாரம்பரிய முறைப்படி, களை கொத்தியை பயன்படுத்தி விதைப்பு; இரண்டாவதாக கம்பு, எள் விதைப்பது போல மணிலா பயிரை ஏக்கருக்கு, 40 கிலோ என்ற அளவில் விதைத்து, பின்பு ரொட்டவேட்டர் மூலம் உழவு ஓட்டி பின்பு பாத்தி பிடிப்பது; மூன்றாவதாக கல்டிவேட்டர் மூலம் இயங்கும் இயந்திரத்தை பயன்படுத்தி பயிர் போட்டு பின்பு பாத்தி கட்டுவது, நான்காவதாக இரண்டு அடி அளவில் கான் பிடித்து, இரண்டு வரிசையில் அரை அடி இடைவெளியில் பயிர் விதைத்து பின்பு பாத்தி கட்டுவது என, மணிலா விதைப்பு நடந்து வருகிறது.

இதுகுறித்து உழவர் மன்ற தலைவர், ராமலிங்கம் கூறுகையில், இம்முறை நான்கு வழிகளில் மணிலா விதைப்பு செய்யப்படுகிறது. பயிரின் வளர்ச்சியை கண்காணிக்கவும், தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும், விருத்தாசலம் அறிவியல் நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக பேராசிரியர்கள் வர உள்ளனர்.பயிரின் நிலை குறித்து, 15 நாட்களுக்கு ஒரு முறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க உள்ளோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X