சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீன் மார்க்கெட்டிற்கு எதிர்ப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் ஊராட்சியில் செயல்படும் மீன் மார்க்கெட்டிற்கு கணிசப்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் எதிர்ப்பின் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் ஊராட்சி, கந்தன்பாளையம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 85 சென்டில் குத்தகைக்கு மீன்மார்க்கெட் இயங்கி வந்தது.கோவில் நிர்வாகத்தினர் மீன்

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் ஊராட்சியில் செயல்படும் மீன் மார்க்கெட்டிற்கு கணிசப்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் எதிர்ப்பின் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் ஊராட்சி, கந்தன்பாளையம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 85 சென்டில் குத்தகைக்கு மீன்மார்க்கெட் இயங்கி வந்தது.கோவில் நிர்வாகத்தினர் மீன் மார்க்கெட்டிற்கு இடம் தர முன்வராததால் அருகில் உள்ள இடத்தில் கடந்த 25 நாட்களாக மீன்மார்க்கெட் இயங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை 10:00 மணியளவில் தற்போது இயங்கி வரும் மீன் மார்க்கெட்டால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அருகில் உள்ள கணிசப்பாக்கம் ஊராட்சி தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் அப்பகுதியை 10க்கும் மேற்பட்டோர், அங்கிருந்த மீன்வியாபாரிகளிடம் இங்கு மீன்மார்க்கெட் இயங்ககூடாது எனக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே எல்.என்.புரம் ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி செல்வமணி மீன் வியாபாரிகளுக்கு ஆதரவாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, இருதரப்பினரும் பேசி தீர்வு காண கூறியதால், இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X