பொது செய்தி

தமிழ்நாடு

கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
கோவை,:தமிழக அரசால் வழங்கப்படும், கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் வகையில் சமுதாய நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு, இந்திய அரசு ஆண்டுதோறும்

கோவை,:தமிழக அரசால் வழங்கப்படும், கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் வகையில் சமுதாய நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு, இந்திய அரசு ஆண்டுதோறும் கபீர் புரஸ்கார் விருது வழங்கி வருகிறது.அதன்படி, 2020- 21ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதிற்கான விண்ணப்பங்கள், தகுதி வாய்ந்த நபர்களிடம் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கான படிவங்களை, மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலகத்தில் வரும், 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X