பொது செய்தி

தமிழ்நாடு

நங்குடியில் வீடு கட்டும் திட்ட ஊக்குவிப்பு விழிப்புணர்வு கூட்டம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த நங்குடி ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பொது மக்களுக்கான ஊக்குவிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.நங்குடி ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் வசந்தி தலைமை தாங்கினார். ஊராட்சிகளின் வீடு கட்டும் திட்ட பணிமேற்பார்வையாளர் லதா, ஊராட்சி உறுப்பினர் புஷ்பமேரி முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த நங்குடி ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பொது மக்களுக்கான ஊக்குவிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

நங்குடி ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் வசந்தி தலைமை தாங்கினார். ஊராட்சிகளின் வீடு கட்டும் திட்ட பணிமேற்பார்வையாளர் லதா, ஊராட்சி உறுப்பினர் புஷ்பமேரி முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் வீராசாமி வரவேற்றார்.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ரூ. ஒரு லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் தவணைத் தொகை மத்திய அரசு செலுத்தியது.இது நாள் வரை வீடு கட்டாத பயனாளிகள் வீடு கட்டும் பணியை துவங்க வேண்டும் என அதிகாரிகள் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டனர். ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் , பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X