பொது செய்தி

இந்தியா

அவதார புருஷர் சாய்பாபா: நவ.,23 சாய்பாபா பிறந்தநாள்

Updated : நவ 23, 2020 | Added : நவ 22, 2020
Share
Advertisement
சாய்பாபா அவதார புருஷராகவும் ஆன்மிக குருவாகவும் போற்றப்படுபவர். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் எண்ணற்ற இலவசக் கல்வி நிலையங்கள் மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை புரிந்து வந்தார். இவருடைய பெயரில் 1200க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகெங்கிலும் செயல்படுகின்றன. இன்று (நவ., 23) சாய்பாபாவின் 94வது அவதார நாள்

சாய்பாபா அவதார புருஷராகவும் ஆன்மிக குருவாகவும் போற்றப்படுபவர். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் எண்ணற்ற இலவசக் கல்வி நிலையங்கள் மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை புரிந்து வந்தார். இவருடைய பெயரில் 1200க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகெங்கிலும் செயல்படுகின்றன. இன்று (நவ., 23) சாய்பாபாவின் 94வது அவதார நாள் கொண்டாடப்படுகிறது.latest tamil news* 1926 நவ.,23: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பெத்த வெங்கப்ப ராஜு -- ஈஸ்வரம்மா
தம்பதியின் மகனாக சாய்பாபா அவதரித்தார். பெற்றோர் வைத்த பெயர் சத்யநாராயண ராஜு.

* 1940 அக்., 20: சத்யநாராயண ராஜு 14வது வயதில் தன் பெயர் 'சாய்பாபா' என்றும் தான் ஷிரடி சாய்பாபாவின் மறு அவதாரம் என்றும் பக்தர்களிடம் அறிவித்தார். அந்த நாள் 'அவதார
அறிவிப்பு தினம்' என கொண்டாடப்படுகிறது.

* 1950 நவ.,23: புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலைய ஆசிரமத்தை தன் 24வது பிறந்த நாளில் திறந்து வைத்தார்.

* 1957 அக்டோபர்: பிரசாந்தி நிலையம் பின்புறம் இலவசப் பொது மருத்துவமனையைத்
திறந்தார்.

* 1968 ஜூன் 29: சாய்பாபா கென்யா, உகாண்டா விஜயம் செய்தார். அவர் வெளிநாட்டிற்குச் சென்றது இந்த ஒருமுறை மட்டுமே.

* 1968: ஆந்திர மாநிலம் அனந்தபூரில் மகளிர் கல்லுாரி, மும்பையில் ஆன்மிகம், சமூக சேவைக்காக 'சத்யம்' மந்திரை நிறுவினார்.

* 1972: ஆன்மிகம், சமூகப் பணிகளை நிர்வகிக்க ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையை
நிறுவினார்.

* 1981: புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய் பல்கலை, சென்னையில் 'சுந்தரம்' மந்திர் திறக்கப்பட்டது.

* 1991 நவ.,22: புட்டபர்த்தியில் இலவச அதிநவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடக்கம்.

* 1995 மார்ச்: ஆந்திர மாநிலம் ராயல சீமா பகுதியில் 12 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மெகா குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினார்.

* 2001 ஜன.,19: பெங்களூருவில் இலவச சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை துவக்கம்.

* 2011 ஏப்.,24: காலை 6:25 மணிக்கு சாய்பாபா ஸித்தியடைந்தார். புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தின் குல்வந்த் ஹாலில் சாய்பாபாவின் மஹாசமாதி அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் நவ., 23ல் சாய்பாபா அவதார தினமும் ஏப்., 24 அன்று மகா சமாதி தினமும் கொண்டாடப்படுகின்றன. மேலும் மகா சிவராத்திரி, ராமநவமி, குருபூர்ணிமா, கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற அனைத்து மத விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.

நவம்பர் இரண்டாம் சனிக்கிழமை மாலை 6:00 மணி முதல் மறுநாள் மாலை 6:00 மணி வரை
24 மணி நேர அகண்ட பஜனை உலகெங்கிலும் நடைபெறுகிறது.புட்டபர்த்தியில் சாய்பாபா இருந்த போது நடைபெற்று வந்த மருத்துவம், கல்வி, அன்னதானம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தற்போதும் தொடர்கின்றன.


latest tamil news

அறக்கட்டளையின் பணிகள்ஸ்ரீ சத்யசாய் சேவா மையம், ஸ்ரீ சத்யசாய் மத்திய அறக்கட்டளை ஏழைகளுக்கு மருத்துவச் சேவைகளைச் செய்கின்றன. 2019ல் 15 லட்சம் ஏழைகளுக்கு உதவ 50 ஆயிரம் தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்தனர்.புட்டபர்த்தி, பெங்களூரு, குஜராத்தின் ராஜ்கோட் பகுதிகளில் சிறந்த மருத்துவ வசதி, நாடெங்கிலும் பயன்படும் வகையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படு கின்றன.

இருதயம், நரம்பு, சிறுநீரகம் உட்பட முக்கிய உறுப்புகளுக்கான பல லட்சம் ரூபாய் மருத்துவ வசதிகளை சாய் அறக்கட்டளை இலவசமாக செய்கிறது.மாற்றுத்திறனாளிகள் கருவிகள்,
சிறப்புத் திறனாளிகள் தேவைகள், எலும்புத் தேய்மான நோயாளிகள், பல், கண் நோயாளிகளுக்குத் தேவையான உபகரணங்களை அறக்கட்டளை மூலம் பெறலாம்.

வாயில்லா ஜீவன்களுக்கான மருத்துவ சிகிச்சைகளையும் இந்த அறக்கட்டளை
மேற்கொள்கிறது. 2019ல் மட்டும் 70 ஆயிரம் விலங்குகளுக்கு நாடு முழுதும் நடந்த 684 முகாம்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.இது தவிர கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி
உள்ளனர்.


கொரோனா சிகிச்சை சிறப்பு மையம்கொரோனா தனிமைப்படுத்துதல் மையங் களை மார்ச் 26ல் புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் டாக்டர் குருமூர்த்தி தொடங்கி வைத்தார்.அதோடு
பிரதமரின் நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாயும் ஆந்திர முதல்வர் நிவாரண நிதியத்துக்காக
5 கோடி ரூபாயும் அறக்கட்டளை மூலம் கொடுக்கப்பட்டது.

'என்-95' முக கவசம், சிரிஞ்சு மற்றும் உபகரணங்கள், மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றும் உபகரணங்கள் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள 14 கொரோனா சிகிச்சை மையங்களுக்கு தரப்பட்டுள்ளன.அம்மாவட்ட பகுதிகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 கிலோ அரிசியுடன் நிவாரண பொருட்களை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.ஜே.ரத்னாகர் ஜூலை 30ல் வழங்கி துவக்கி வைத்தார்.

புட்டபர்த்தியில் 120 படுக்கைகள், ஐந்து ஐ.சி.யு. படுக்கைகள், ஐந்து வென்டிலேட்டர், ஆக்சிஜன் வசதியுடன் தனித்தனி அறைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் ஆக., 20ல் துவக்கப்பட்டது. அதில் இதுவரை 2407 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 647 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.உங்கள் உள்ளத்தில் அன்பு எனும் விளக்கைஏற்ற வந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அதில்
பிரகாசம் கூடுவதைப் பார்க்கப் போகிறேன். எந்தஒரு சமயத்தையும் ஆதரித்துப் பேச நான்
வரவில்லை. உலகம் முழுதும் பரவியிருக்கும் நம்பிக்கையைஅன்பெனும் வழியை அன்பெனும் கடமையைஅன்பெனும் பொறுப்பை உங்களுக்குதெரிவிக்கவே வந்திருக்கிறேன்.

- சாய்பாபா
வாழ்க்கை ஒரு விளையாட்டு

அதை விளையாடு
வாழ்க்கை ஒரு சங்கீதம் அதை பாடு
வாழ்க்கை ஒரு கனவு அதை உணரு
வாழ்க்கை ஒரு சவால் அதை சந்தி
வாழ்க்கை அன்பானது அதை அனுபவி

- சாய்பாபா
எண்ணத்தில் இருக்கும் அன்பு தான் உண்மை
செய்கையில் இருக்கும் அன்பு தான் நேர்மை
உணர்வில் இருக்கும் அன்பு தான் அமைதி
புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை

- சாய்பாபா

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X