கொரோனா 2வது அலை சுனாமி போல இருக்கும்: உத்தவ் எச்சரிக்கை

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
மும்பை: கொரோனா வைரஸ் இரண்டாவது அலை, சுனாமி போல இருக்கலாம் என மஹா., முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: கொரோனா தடுப்பூசி நம்மிடம் இல்லை. அதற்கான உரிய சிகிச்சையும் இல்லை. டிசம்பரில் கொனேரா தடுப்பு மருந்து வந்தாலும், அது மஹா.,வுக்கு எப்போது வரும் என தெரியவில்லை. மாநிலத்தில் வசிக்கும் 12 கோடி மக்களுக்கும் இரண்டு முறை கொரோனா
covid_wave,tsunami, Uddhav Thackeray, Maharashtra CM, Shiv Sena

மும்பை: கொரோனா வைரஸ் இரண்டாவது அலை, சுனாமி போல இருக்கலாம் என மஹா., முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கொரோனா தடுப்பூசி நம்மிடம் இல்லை. அதற்கான உரிய சிகிச்சையும் இல்லை. டிசம்பரில் கொனேரா தடுப்பு மருந்து வந்தாலும், அது மஹா.,வுக்கு எப்போது வரும் என தெரியவில்லை. மாநிலத்தில் வசிக்கும் 12 கோடி மக்களுக்கும் இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போட வேண்டும். மொத்தம் 25 கோடி தடுப்பூசி தேவை என்பதால் அதற்கு காலமாகும். எனவே அதுவரை, வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை நாம் கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் அதிகம் கூடக்கூடாது.


latest tamil news



மீண்டும் ஊரடங்கு வேண்டாம். எனது 5 ஆண்டு கால ஆட்சி முழுவதையும் ஊரடங்குடன் நிறைவு செய்ய விரும்பவில்லை. விநாயகர் சதுர்த்தி, தசரா போன்ற பண்டிகைகளை கட்டுப்பாடுடன் கொண்டாடினோம். தீபாவளி பண்டிக்கைக்கும் பட்டாசு வெடிக்க வேண்டாம் என நான் கூறியதை பொதுமக்கள் பின்பற்றினார்கள். கொரோனா முடிந்து விட்டது என யாரும் எண்ண வேண்டாம். வைரசின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை சுனாமி போல மிகவும் ஆபத்தானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - madurai,இந்தியா
23-நவ-202015:13:27 IST Report Abuse
Anand இவன் எதற்கும் லாயக்கு இல்லாதவன் பொம்பளை சினிமா நடிகர்களை தான் மிரட்டுவான்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
23-நவ-202014:23:20 IST Report Abuse
Vena Suna பயத்தை உண்டு பண்ணியே பொழைப்பை நடத்தறது..
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
23-நவ-202004:23:32 IST Report Abuse
Mani . V அப்ப தமிழ்நாட்டில் இதை காரணம் காட்டி மீண்டும் ஒரு நல்ல அறுவடை நடத்தி விடுவார்கள். ஏற்கனவே எத்தனை ஆயிரம் கோடி கொள்ளை? என்று சொல்லவே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X