சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை தாக்கி மூதாட்டி பலி

Added : நவ 22, 2020
Share
Advertisement
கோவை: கோவை அருகே, காட்டு யானை தாக்கியதில், மூதாட்டி ஒருவர் இறந்தார்.கோவை மாவட்டம், தொண்டாமுத்துார், கொங்கு திருப்பதி கோவில் அருகே, நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, இரண்டு காட்டு யானைகள் வந்துள்ளன. தகவலறிந்து வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். நேற்று காலை, 6:00 மணிக்கு, குப்பேபாளையம் அருகே யானைகள் வந்துள்ளன. அங்கிருந்து, தனித்தனியாக

கோவை: கோவை அருகே, காட்டு யானை தாக்கியதில், மூதாட்டி ஒருவர் இறந்தார்.கோவை மாவட்டம், தொண்டாமுத்துார், கொங்கு திருப்பதி கோவில் அருகே, நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, இரண்டு காட்டு யானைகள் வந்துள்ளன. தகவலறிந்து வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை, 6:00 மணிக்கு, குப்பேபாளையம் அருகே யானைகள் வந்துள்ளன. அங்கிருந்து, தனித்தனியாக பிரிந்து சென்றன. குப்பேபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாப்பம்மாள், 72, என்பவர், நேற்று காலை, சாலையில் நடந்து சென்றுள்ளார்.அப்போது, திடீரென பின்னால் வந்த காட்டு யானை, அவரை தாக்கி மிதித்தது. சம்பவ இடத்திலேயே, அவர் உயிரிழந்தார். இதேபோல், குப்பேபாளையத்தில் ராணி, 65 என்ற மூதாட்டியையும், காட்டு யானை தாக்கியது. அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.'வனத்துறையினரின் மெத்தன போக்கே உயிரிழப்புக்கு காரணம்' எனக் கூறிய அப்பகுதி மக்கள், வனத்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். போளுவாம்பட்டி வனச்சரகர் ஆரோக்கியசாமி மற்றும் போலீசார், பேச்சு நடத்தினர். பின், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X