சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணப்பாறையில் கடத்தப்பட்ட லாரி: 60 கி.மீ., துரத்தி பிடித்த போலீசார்

Updated : நவ 23, 2020 | Added : நவ 22, 2020
Share
Advertisement
திருச்சி: மணப்பாறை அரிசி ஆலையில் இருந்து கடத்தப்பட்ட லாரியை, 60 கி.மீ., துரத்திச் சென்று, போலீசார் மடக்கிப் பிடித்தனர்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த முத்தபுடையான்பட்டியைச் சேர்ந்தவர் நாகப்பன், 44. அதே பகுதியில், நவீன அரிசி ஆலை நடத்தி வரும் இவருக்கு சொந்தமான புதிய லாரி, நேற்று முன்தினம் மதியம், ஆலை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.வேகமெடுத்ததுலாரி டிரைவர் மற்றும்
 மணப்பாறையில் கடத்தப்பட்ட லாரி: 60 கி.மீ., துரத்தி பிடித்த போலீசார்

திருச்சி: மணப்பாறை அரிசி ஆலையில் இருந்து கடத்தப்பட்ட லாரியை, 60 கி.மீ., துரத்திச் சென்று, போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த முத்தபுடையான்பட்டியைச் சேர்ந்தவர் நாகப்பன், 44. அதே பகுதியில், நவீன அரிசி ஆலை நடத்தி வரும் இவருக்கு சொந்தமான புதிய லாரி, நேற்று முன்தினம் மதியம், ஆலை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.வேகமெடுத்ததுலாரி டிரைவர் மற்றும் ஆலை தொழிலாளர்கள் சாப்பிட சென்று விட்டனர். ஆலையில், கணக்காளர் குமார் மட்டும் இருந்தபோது, மர்ம நபர் ஒருவர், திடீரென லாரியை அங்கிருந்து எடுத்துச் சென்றார். அதிர்ச்சியடைந்த குமார், டூ - வீலரில், லாரியை துரத்தினார்.திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற லாரி, மரவனுார் அருகே சமுத்திரம் வழியாக, கிராம சாலையில் புகுந்தது. சமுத்திரம் ரயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றபோது, லாரியின் வேகம் குறைந்ததால், குமார் டூ - வீலரை போட்டு விட்டு, லாரியின் பின்னால் ஏறிக்கொண்டார்.மேலும், ஆலை உரிமையாளருக்கும், நண்பர்களுக்கும் லாரி செல்லும் பகுதியை, மொபைல் போன் மூலம் தெரியப்படுத்தினார். உடனே, லாரி டிரைவர் மற்றும் ஆலை தொழிலாளர்கள், ஒரு காரில் பின் தொடர்ந்தனர்.சமுத்திரம் வழியாக, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலைக்கு சென்ற லாரி, மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியை நோக்கி வேகமெடுத்தது. விராலிமலை அடுத்த பூதக்குடி டோல்கேட்டில், தடுப்பை உடைத்து, நிற்காமல் சென்றது.இது பற்றி, மணிகண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நெரிசலில் சிக்கியதுமணிகண்டம் பகுதியில் தயாராக இருந்த போலீசார், லாரியை நிறுத்த முயன்ற போது, லாரி நிற்காமல் சென்றது.

இதனால், போலீசாரும், காரில் வந்தவர்களும் லாரியை துரத்திச் சென்றனர்.சுமார் 60 கி.மீ., கடந்த லாரி, திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி காந்தி மார்க்கெட் அருகே சென்றபோது, போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. உடனே, லாரியை கடத்திய மர்ம நபர், லாரியை நிறுத்தி விட்டு தப்பிக்க முயன்றார்.போலீசார், அவரை மடக்கிப் பிடித்து, மணப்பாறை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவர், விருதுநகரைச் சேர்ந்த பிச்சைமணி, 43, என்பது தெரிந்தது.மனநலம் பாதிக்கப் பட்டவர் போல் பேசும் அவரிடம், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X