சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விற்கப்பட்ட குழந்தை மீட்பு தப்பிய இடைத்தரகர் கைது

Added : நவ 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுக்கோட்டை: பச்சிளம் குழந்தையை விற்பதற்கு இடைத்தரகராக செயல்பட்டவரை, போலீசார் கைது செய்தனர். குழந்தையையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே, வேலுார் சமத்துவபுரத்தைச் சேர்ந்த காஜீமுகமது மனைவி ஆமீனா பேகத்துக்கு, கடந்த 2ம் தேதி, பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே, மூன்று குழந்தைகளுடன் வறுமையில் இருந்த அவர்கள், குழந்தையை வளர்ப்பதில் சிரமம்

புதுக்கோட்டை: பச்சிளம் குழந்தையை விற்பதற்கு இடைத்தரகராக செயல்பட்டவரை, போலீசார் கைது செய்தனர். குழந்தையையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே, வேலுார் சமத்துவபுரத்தைச் சேர்ந்த காஜீமுகமது மனைவி ஆமீனா பேகத்துக்கு, கடந்த 2ம் தேதி, பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே, மூன்று குழந்தைகளுடன் வறுமையில் இருந்த அவர்கள், குழந்தையை வளர்ப்பதில் சிரமம் இருப்பதாக, சிலரிடம் கூறியுள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்திய, அப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர், தனக்கு தெரிந்த ஒருவருக்கு குழந்தை இல்லை என்றும், குழந்தையை கொடுத்தால், 1 லட்சம் ரூபாய் வாங்கித் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். சிரமத்தில் இருந்த பெற்றோர், அதற்கு சம்மதிக்கவே, கண்ணன் 1 லட்சம் ரூபாய் கொடுத்து, குழந்தையை வாங்கிச் சென்றுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த, 'சைல்டு லைன்' மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகள், குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.இதில், வறுமை காரணமாக, குழந்தையை விற்றது தெரிந்தது.குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகள் புகார்படி, வழக்கு பதிவு செய்த விராலிமலை போலீசார், மூன்று தனிப்படைகள் அமைத்து, இடைத்தரகர் கண்ணனை தேடி வந்தனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் கண்ணனை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவல்படி, குழந்தையை மீட்டு, குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்திடம் ஒப்படைத்துள்ளனர்.குழந்தையை விலை கொடுத்து வாங்கியவர்களிடமும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
23-நவ-202019:23:53 IST Report Abuse
naadodi வேண்டாம் என்று ஒதுக்கும் பெற்றோர் ஒரு பக்கம் இருக்க, வேண்டும் என்று விரும்பும் பெற்றோர் மறுபுறம்தரகர் செய்வதில் தவறில்லை. பணத்தை குழந்தை பெயரில் போட்டுவிட்டு விருப்பம் தெரிவித்தோரிடம் குழந்தை வளரலாம் .அரசு காப்பகத்தில் அடைத்து அக்குழந்தையின் வாழ்வை அரசாங்கம் நோகடிக்கிறது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X