சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் துணி குடோனில் தீ : 8 நாளில் 2வது சம்பவத்தால் பீதி 

Updated : நவ 23, 2020 | Added : நவ 22, 2020
Share
Advertisement
மதுரை: மதுரை விளக்குத்துாண் பகுதி துணிக் கடையில், நவ., 14ல் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு தீயணைப்பு வீரர்கள் இறந்த சோகம் மறையாத நிலையில், அதே பகுதியில், மூன்று மாடி கட்டடத்தில் உள்ள, துணிக்கடை குடோனில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏதும் இல்லை.தவிர்ப்புமதுரை, விளக்குத்துாண் பகுதியில் உள்ள நவபத்கானா தெரு துணிக்கடை ஒன்றில், தீபாவளியன்று தீ விபத்து

மதுரை: மதுரை விளக்குத்துாண் பகுதி துணிக் கடையில், நவ., 14ல் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு தீயணைப்பு வீரர்கள் இறந்த சோகம் மறையாத நிலையில், அதே பகுதியில், மூன்று மாடி கட்டடத்தில் உள்ள, துணிக்கடை குடோனில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏதும் இல்லை.தவிர்ப்புமதுரை, விளக்குத்துாண் பகுதியில் உள்ள நவபத்கானா தெரு துணிக்கடை ஒன்றில், தீபாவளியன்று தீ விபத்து ஏற்பட்டது.தீயை அணைக்க முயன்ற வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி இறந்தனர். இதையடுத்து, பழமையான கட்டடங்களை ஆய்வு செய்து, தீத்தடுப்பு சாதனங்கள், அவசர வழிகள் அமைக்க, தீயணைப்புத் துறை நோட்டீஸ் வழங்கி வருகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:15 மணிக்கு விளக்குத்துாண் சந்திப்பில், கே.ஆர்., ஜெயராமன் என்பவரது மூன்று மாடி கட்டடத்தின் முதல் தளம், இரண்டாம் தளத்தில் புகை வந்தது.இதை கவனித்த வேறு கட்டடத்தின் வாட்ச்மேன், விளக்குத்துாண் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தகவல் தெரிவித்தார். இதற்கிடையே, இருதளங்களும் முற்றிலும் தீப்பிடித்தன.அதிகாலை, 4:45 மணி முதல் காலை, 7:30 மணி வரை, ஆறு தீயணைப்பு வண்டிகள், ஆறு மாநகராட்சி லாரிகள் மூலம் தீயணைக்கும் முயற்சியில், வீரர்கள் ஈடுபட்டனர்.முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு, தீயை அணைத்ததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.விசாரணைசில நாட்களுக்கு முன் தான் இக்கட்டடத்தை, தீயணைப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, அவசர வழிகள் இல்லாதது உள்ளிட்ட குறைகளை குறிப்பிட்டு, நோட்டீஸ் வழங்கிய நிலையில், தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

1986ல் கட்டப்பட்ட இக்கட்டடத்தின் முதல் இரண்டு தளங்களை, சின்னசொக்கிகுளம் சைபர் சுகமது, 33, வாடகைக்கு எடுத்துள்ளார்.நகரில், ஒன்பது இடங்களில் துணிக்கடை நடத்தி வரும் இவர், இக்கட்டடத்தின் முதல் தளத்தை அலுவலகமாகவும், இரண்டாம் தளத்தை, துணி குடோனாகவும் பயன்படுத்தினார்.மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. விளக்குத்துாண் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X