சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி மரணம் எஸ்.ஐ.,யிடம் விசாரணை

Added : நவ 22, 2020
Share
Advertisement
தர்மபுரி: மர்மமாக இறந்த மனைவியின் சடலத்தை, எரிக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ.,யிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.தர்மபுரி, வெண்ணாம்பட்டியைச் சேர்ந்தவர் கார்மேகம், 56; பொம்மிடி போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றுகிறார். இவரது மனைவி பேபி, 53; தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.நேற்று முன்தினம் பேபி, வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை மீட்ட உறவினர்கள், தர்மபுரியில் உள்ள ஒரு தனியார்

தர்மபுரி: மர்மமாக இறந்த மனைவியின் சடலத்தை, எரிக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ.,யிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தர்மபுரி, வெண்ணாம்பட்டியைச் சேர்ந்தவர் கார்மேகம், 56; பொம்மிடி போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றுகிறார். இவரது மனைவி பேபி, 53; தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.நேற்று முன்தினம் பேபி, வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை மீட்ட உறவினர்கள், தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு, கொண்டு சென்றனர். அவர் இறந்து விட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, எஸ்.எஸ்.ஐ., கார்மேகம், அன்றிரவு, 11:௦௦ மணிக்கு, போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், பேபியின் உடலை தகனம் செய்ய முயன்றுள்ளார். தகவலறிந்த தர்மபுரி டவுன் போலீசார், பேபியின் உடலை கைப்பற்றி, பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், கார்மேகம், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். பேபியின் தலையில் காயம், காதில் ரத்தம் வழிந்திருந்தது. சந்தேகமடைந்த போலீசார், கார்மேகத்திடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X