பொது செய்தி

தமிழ்நாடு

கார்த்திகை முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு அபிேஷகம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
நாமக்கல்: தமிழ் மாதம் முதல் ஞாயிற்று கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபி ேஷகங்கள் நடந்தன.நாமக்கல் நகரில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர், நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.அங்கு ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தமிழ், ஆங்கில, தெலுங்கு வருட பிறப்புகள்,

நாமக்கல்: தமிழ் மாதம் முதல் ஞாயிற்று கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபி ேஷகங்கள் நடந்தன.

நாமக்கல் நகரில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர், நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.அங்கு ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தமிழ், ஆங்கில, தெலுங்கு வருட பிறப்புகள், அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, தீபாவளி, பொங்கல் உள்ளிட விழாக்களில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.

அதன்படி, நேற்று கார்த்திகை மாத முதல் ஞாயிறு அன்று, அபி ேஷகம் செய்யப்பட்டது.காலை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடந்தது. 11:00 மணிக்கு பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், நல்லெண்ணெய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபி ேஷகம் நடந்தது.மதியம், 1:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.கொரோனா தொற்று காரணமாக, பக்தர்கள் சமூக இடைவெளியுடனும், முக கவசம் அணிந்தபடியும், வரிசையில் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X