சம்பவம் செய்தி

தமிழ்நாடு

8 கார்களுடன் தலைமறைவு மூவருக்கு போலீஸ் வலை

Added : நவ 22, 2020
Share
Advertisement
புதுச்சேரி: வாடகைக்கு எடுத்து சென்ற எட்டு கார்களுடன் தலைமறைவான மூவரை, போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, மூலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 26; இவர், தன் மாருதி சுசூகி பலினோ காரை, வாடகைக்கு கொடுத்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம், கோரிமேட்டைச் சேர்ந்த ஜீவரத்தினம், 38, என்பவர், விக்னேஷிடம் அறிமுகமானார். புகார்அப்போது, மூலக்குளம் பகுதியில், ஜோதி கார் வாடகை

புதுச்சேரி: வாடகைக்கு எடுத்து சென்ற எட்டு கார்களுடன் தலைமறைவான மூவரை, போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, மூலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 26; இவர், தன் மாருதி சுசூகி பலினோ காரை, வாடகைக்கு கொடுத்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம், கோரிமேட்டைச் சேர்ந்த ஜீவரத்தினம், 38, என்பவர், விக்னேஷிடம் அறிமுகமானார். புகார்அப்போது, மூலக்குளம் பகுதியில், ஜோதி கார் வாடகை நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதற்கு கார் வாடகைக்கு வேண்டும் என ஜீவரத்தினம் கேட்டுள்ளார். விக்னேஷ், தினசரி, 1,000 ரூபாய் வாடகை பேசி, முன்பணம், 10 ஆயிரம் ரூபாய் பெற்று, காரை கொடுத்துள்ளார்.ஜீவரத்தினத்துடன், பண்ருட்டியைச் சேர்ந்த சிவமணி, 34; பாலமுருகன், 36 உடனிருந்தனர்.இதேபோல் மேலும் பல கார்கள் வாடகைக்கு தேவைப்படுவதாக ஜீவரத்தினம் கூறினார்.இதை நம்பி, விக்னேஷ், தனக்கு தெரிந்த நண்பர்களிடம் பேசி, அவர்களின் கார்களையும், நாள் வாடகைக்கு ஜீவரத்தினத்திடம் கொடுத்துள்ளார்.இதன்படி, கோரிமேடு அரவிந்தனின் இரண்டு ஸ்விப்ட் டிசையர் கார், சந்தோஷ் என்பவரிடம் மகேந்திரா எக்ஸ்.யு.வி., கார், கோட்டக்குப்பம் விஜய் என்பவரிடம், இரண்டு டொயோட்டா எடியாஸ், ஒரு போலோ என மூன்று கார்கள், கடைசியாக மூலக்குளம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரிடம் ஸ்விப்ட் டிசையர் காரை வாங்கி சென்றுள்ளனர்.கார்களை வாங்கிய சில நாட்களில், அதற்கான வாடகையை கொடுக்காமல், ஜீவரத்தினம் ஏமாற்றி வந்துள்ளார். அவரது அலுவலகம் என தெரிவித்த இடத்திலும், கார்கள் இல்லை.கார்களுடன் மாயமான ஜீவரத்தினம், பண்ருட்டி சிவமணி, பாலமுருகன் ஆகியோர் மீது, ரெட்டியார்பாளையம் போலீசில் விக்னேஷ் புகார் அளித்தார். தேடுதல்ஜீவரத்தினம், ரெயின்போ நகர் மற்றும் லாஸ்பேட்டையில் கார் வாடகை அலுவலகம் திறந்து, பலரது சொந்த பயன்பாட்டு கார்களை, வாடகைக்கு வாங்கி திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளதாக, பெரியகடை மற்றும் லாஸ்பேட்டை போலீசில் ஏற்கனவே புகார் உள்ளது.இதுதொடர்பாக, போலீசார், ஜீவரத்தினத்தை அழைத்து விசாரித்தனர்.அப்போது, கார்களை திருப்பி கொடுப்பதாக கூறிச் சென்ற ஜீவரத்தினம், தற்போது தலைமறைவாகி விட்டார். அவர் உட்பட மூவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X